உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சிவன் காட்சியளித்த இடம் வேறு வேறு; அதைப்போலவே உருவமும் வேறு வேறே. வயோதிகராயும் வருவார், இளமையுடையவராகவும் காணப்படுவார். அதுமட்டுமல்ல ; காமாந்தகராகவும் முற்றுந் துறந்த பெரியோராகவும் வரு வார். ஆனால் பொதுவாக பிராமண வேடம்மட்டும் எல்லா நேரத்திலும் அவரிடம் காணப்படும். கடவுள் கருணை உள் ளத்தால் உலகில் தோன்றும் ஒவ்வொரு வேளையிலும் பார்ப் பன வடிவந் தாங்கத் தவறியதில்லை. வான்சுரரை விட்டு வந்த பூசுரக் கூட்டத்தார் தானே, உலகில் உயர்ந்த சாதி யார். ஆகவேதான் பார்ப்பன வேடத்தையே அவர் தெரிந் தெடுத்தார்போலும். அதுமட்டுமா? இயற்பகை நாயனார் ஈசனடியாருக்கு இல்லையென்னார் என்பதை அறிந்து, இல்லக் கிழத்தியைக் கேட்டுப் பெற்றார். சிறுத்தொண்டர் சிவத் தொண்டருக்கு விருந்திடும் விருப்பத்தார் என்பதையறிந்து பிள்ளைக் கறிகேட்டார். சிவன் கண்ணப்பரைக் கண்ணைக் கேட்டார். திருநீலகண்டரிடத்திலே கொடுத்த ஓட்டை, மறையச்செய்து அவரை மன்றத்திற்கு இழுத்தார். மனைவி யைக் கேட்பவர் மகேசுவரனாவாரா? சிசுக்கறி கேட்பவர் சிவனாவாரா? இப்படிப்பட்ட கடவுட் கருத்துக்கள் மக்களை நல்வழிப்படுத்தவாவது துணையாகுமா என்று எண்ணிப் பாருங்கள். P மற்றும் பெரிய புராணம் சாதி வேற்றுமையை ஒழிக்க வந்தது என்று கூறுவார் சிலர். உண்மையிலேயே சா தியை ஒழிக்கத் தோன்றியிருக்குமேயானால், இவ்வளவு ஆயிரக் கணக்கான மக்கள் பெரிய புராணம் படித்தும் சாதிப்பித்து தலைக்கேறியவர்களாய் இருக்கமாட்டார்கள். எல்லாச் சாதிக் காரர்களுக்கும் புலையனுக்குங்கூட சிவன் அருள் புரிந்ததாகக் கூறப்படுகிறதே; தாழ்ந்தோனுக்கும் அவனருள் இருந்திருக் கிறதே என்றால், அதற்குக் காரணம், எந்தச் சாதியாக இருந் தாலும், சைவத்தைத் தழுவினால் சிவனருள் கிடைக்கு மென்று நம்பச்செய்து எல்லாச் சாதிக்காரரையும் சைவத் தைப் பின்பற்றச் செய்யவேண்டுமென்பதே ஆகும்.