உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 .3593 இன்னும் ஆழ்ந்து சிந்தித்தால் எந்தச் சாதியாய் இருந் தால்தான் என்ன? அதைப்பற்றிக் கவலைசொள்ளாதே! அதை ஒழிப்பதற்கு நடைபெறும் போராட்டமெல்லாம் வீண். "சிவாயநம " வென்று சிந்தித்து இருந்தால், உலகில் உனக்கொரு அபாயமும் இல்லை; அதன்பின் அவ்வுலக வாழ்வில் அவனருள் நிச்சயமாக உண்டு என்ற மூட நம்பிக் கையை வளர்க்கவும், அதன் மூலமாகச் சாதி வேறுபாட்டை நிலைநாட்டவும் காரணமானது பெரியபுராணமாகும். மற்றும் சாதி கூடாது என்ற எண்ணத்தால் தோன்றியிருந்தால் அதில் சாதியைப்பற்றிய குறிப்பிருக்கவேண்டும்? ன்ன அடியார் இன்னகுலத்திலே தோன்றினார். என்ற செய்தியைக் கூறாவிட்டால் ஏற்படும் குறைவென்ன ? ? ஆகவே பெரிய புராணம் சைவ மத வளர்ச்சியைக் காரண மாகக் கொண்டு எழுதப்பட்டதேயன்றி, மக்கள் வாழ்க் கையை நோக்கமாகக் கொண்டு அன்று, என்று துணியலாம். ஏன் ம் வேறு சிலர், பெரிய புராணம் உலகவாழ்க்கையைக் கூற வந்தது அல்லவென்றும், அது உலக வாழ்க்கையைக் கடந்த பெரியவர்களைப்பற்றி, உலகினை மறந்த உலக வழக்க ஒழுக் கங்களை மறந்த உயர்நெறி அடைந்தவர்களைப்பற்றிக் கூறுவ தென்றும், அதில் தவறு காண்பது தகாது என்றும் செப்பு வர். உலகியல் நெறியைக் கடந்தவர்களானால், . உலகில் மனைவி மக்கள் என்ற தொடர்போ உணர்ச்சியோ அவர்க ளிடத்தில் இருக்கமுடியாது. அப்படியானால், இயற்பகை நாயனாருக்கு அவரது மனைவி என்று சொல்லப்பட்டவரிடம் கணவனுக்கு மனைவியிடத்திலே இருக்கவேண்டிய உணர்ச் சியோ உரிமையோ இருக்கமுடியாது. அதைப் போலவே சிறுத்தொண்டருக்கும் தன் பிள்ளையிடம் பிள்ளைப்பாசமோ பிள்ளை என்ற கருத்தோ இருந்திருக்க முடியாது. அப்படி யானால் மனைவியை அளிக்கவோ, பிள்ளையைக் கோரவோ எப் படி உரிமை என்று கேட்கிறேன்.பழைய ஆரியக் கொள்கைப் படியே மனைவியும் பிள்ளையும் கணவனுக்கும் தந்தைக்கும் உரிமையானவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம்.