31 களோ அன்றிப் பாவாணர்களோ விரும்பினால், வாழ்க்கையை வளப்படுத்த கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்ற சீர்திருத் தக்காரர்கள் பெரிய புராணத்தின் கொடுமையை விளங்கச் செய்ய அதைக் கொளுத்தினால் அது தவறாகமுடியுமா என்று கேட்கிறேன். திருவிளையாடல் புராணத்திலே மாபாதகந் தீர்த்த பட லத்திலே தாயைப் புணர்ந்து, அது கண்டு சகியாத தந்தை யைக் கொன்ற பார்ப்பனன் ஒருவனுக்குத் தயாபரன் அருள் புரிந்த செய்தி கூறப்படுகிறது. சொக்கட்டான் ஆடிக்கொண் டிருந்த சொக்கநாதர், பக்தன், பார்ப்பனன் என்ற காரணத் தால், பாதகம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதுபற் றிக் கவலை கொள்ளாமல் பசுவுக்குப் புல்லிட்டு, பொற்றா மரைத் தடாகத்தில் மூழ்கி எழுந்து, கோவிலை மூன்றுமுறை வலம் வரப் பாபம் தீரும் என்று பகர்ந்தாராம். பார்ப் பனன் பாபம் பாபம் தீர்ந்து பரமபதம் அடைந்தானாம். பார்ப்பனர்கள் எல்லோருக்குமே,பரமசிவன், பரமபதம் அளிக்கட்டும் நமக்குத் திருப்தியே. ஆனால் நம்மவரை மட் டும் துன்புறுத்தினால், துன்புறுத்தியதாகவே செய்திகள் இருக்குமானால், அது கடவுளுமாகாது, அதைக் கூறுவது கலையுமாகாது. கண்ணப்ப நாயனாரைக் கண்ணைப் பெயர்த்து அப்பச்செய்தார் சிவன்; காரைக்காலம்மையாரை தேய்ந்து எலும்புருவம் பேயுருவம் பெறச்செய்தார். இயற் கேட்டார்; நந்தனாரை நெருப்பில் இறக்கினார் ; மற்றும் பலரைப் பல தொல்லைக் குள்ளாக்கினார். சிவனருள் பெற்றோர் சரிதத்திலேயே தொல்லைக்குள்ளானோ ரும் துயரடைந்தோரும் தமிழர்கள்தாம் என்பதும், பார்ப் பனர்கள், அங்கும் பரிபக்குவத்துடனேயே பரீட்சைக்குள் ளாக்கப்பட்டு, பரமபதம் சேர்க்கப்பட்டார்கள் என்பதும் காணப்படுமேயானால், மற்ற துறைகளிலே " ஒரு குலத்துக் கொரு நீதி "யும், பிராமணர்களுக்கே தனி நீதியும் அமைந் திருப்பதை அகற்றமுடியுமா என்று எண்ணிப் பாருங்கள். மக்கள் நம்பிக்கைக்கு இயைந்துவிட்ட இலக்கியங்களிலே, பகையை மனைவியைக் - உடல்
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/37
Appearance