32 இந்நிலை காணப்பட்டால், பிற வாழ்க்கையிலே மாற்றங் காண் வதற்கு அவர்களால் இயலுமா? அவர்கள் நம்பிக்கை தான் இடந்தருமா? ஆகவே தான் இக்கலைகளிலே ஒருபுரட்சி, ஒரு புதுமை, ஒரு மாற்றந் தேவை யென்று கருதவேண்டியவர் களா யிருக்கிறோம். பாரதம், வில்லிப்புத்தூராரால், எழுதப்படாமல் இருக் குமேயானால், சூதாட்டமே, தமிழிலக்கியத்தில் இடம் பெற் றிருக்காது. இருந்தாலும், அதில் சூதாட்டத்தினால் உண்டா கும் துன்பங்களல்லவா சொல்லப்பட்டுள்ளன, சூது வெறுக் கப்படவன்றோ துணையாகும் அது என்றும் சிலர் கருதலாம். ஆனால், தருமன் அதே அதே சூதாட்டத்தினைக் கண்ணனை நினைத்து ஆடி, தன்னையும் தம்பியரையும் திரௌபதியையும் மீட்டான் என்று முடிகிறது சூதுபோர்ச் சருக்கம். அதிலே தான் சூதும் இருக்கிறது. கண்ணனை, (வேறு கடவுளையும்) கருத்தில்கொண்டு, எத்தகைய சூழ்ச்சி படைத்தவனை எதிர்த்து சூதாடினாலும் வெற்றி நிச்சயம் என்ற கருத்து அங்கே இருக்கிறது. அப்படியானால், கடவுள் பெயரைச் சொல்லியே சூதிலே மக்கள் இறங்க நேரிட்டதில் ஆச்சரிய மென்ன? கடவுளையே திருடர்களும் துணை கொண்டிருப்ப தில் தான் வியப்பென்ன ? - P மேலும் பாரதச் சூதாட்டத்தில் வையமும், அரசும், வாழ்வும் - பந்தயப் பொருளானதோடு நிற்கவில்லை. தன் னைத்தானே பந்தயப் பொருளாக வைப்பதை, மனிதன் தானே அடிமையாவதைக் காணுகிறோம். அதனினும் முழு உரிமை பூண்ட தன் தம்பியர்களை அடிமைகளாகவே உள் ளத்தில் கொண்டு ஒட்டமாகவைத்து, மாற்றானுக்கு அடிமை யாக்கியதைக் காண்கிறோம். அது மட்டுமா? தருமன், பந்தயப் பொருளாக வைத்தான், இழந் தான். மனைவியைப் பந்தயம் வைத்திழந்தவன் மானத்தை இழக்காமல் இருக்கமுடியுமா? அதுவும் பறிக்கப்பட்டது, திரௌபதியின் துகில் பறிக்கப்பட்டபோது. தமிழிலக்கியத் மனைவியையே . - க
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/38
தோற்றம்