பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“நெசமான அன்பும் நேசமும் இல்லாத பொய்யான ஆளுங்களுக்கு ஊடாலே, பொண்ணாப் பொறந்தவ நானு வாழ்ந்துப் புடலான்னு. நெனச்சதே குத்தமின்னு புரியிறத்துக்கு இம்மாங் காலமாயிருக்குது!” என்று அழுகிறாள்.

இந்தத் தேவானையின் கதியும் அம்மாதிரிதான்!

ஆம்; பெண்மையின் அரணாகப் பெண்மை மதிக்கப் பெற்று வாழ்த்தப்பட வேண்டும்.

இவ்வகையில் நான் படைத்த பஞ்சவர்ணத்தின் நிழலில் ஒண்டுகிறாள் தேவானை. வாழ்த்தத்தான் வேண்டும். யாரை?... பஞ்வர்ணத்தை!... ஆமாம்; பஞ்சவர்ணத்தைத் தான்!...

ஆனால், அவளை வாழ்த்த அவளது தற்காலிகக் காதலன் (Temporary lower) தயாராக இல்லை! அதனால் தான், கதைக் கருவுக்கு ஓர் பிடிப்பும், கதை உறுப்பினளான தேவானைக்கு ஓர் உயிர்த்துடிப்பும் இருக்கிறது. ஆனால் அவளது உயிர்துடிப்பைப் பறித்துக் கொண்ட குற்றத்திற்கு சுப்பிரமணியம் மட்டும் ஆளாகவில்லை. இந்த நாவலின் ஆசிரியரும் உடந்தையாகிறார்! அபலை தேவானையின் கற்பு முழுமை பெறாதது போலவே அவரது பாத்திரமும் அரைகுறையாகிறது.

அனுதாபங்கள் முக்கோண ரீதியில் பிரிவினை பெறுமாக!..


பாத்திரங்கள்-செப்பு!

பாத்திரத்தில் இருக்கும் நீர் நிரம்பி வழியவும் இல்லை. வற்றிப்போய் விடவும் இல்லை. அதில் என்ன பயன்?

106