பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விளக்கி, கங்கை கொண்டு மீண்டும் அமைத்த நகரம் தான் கங்கை கொண்ட சோழபுரம். இதுவே முதல் குலோத்துங்கனுக்கு இதயத் துடிப்பு.

‘செம்பியன் செல்வி’யைப் படிக்கும் பேறு பெற்றவர்கள் இரண்டொரு நிமிஷங்கள்வரை மயக்கம் போட்டு விழாமல் இருப்பார்களென்று நம்புகிறேன்.

காரணம் இதுவே:

இந்த வரலாற்றுப் புதினத்திற்கு நான் தேர்ந்தெடுக்கும் கதாநாயகன் கருணாகரத் தொண்டைமான் என்று தானே நீங்கள் கருதுகிறீர்கள்?

அப்படித்தான் ஆசிரியர் கருதுகிறார்.

கருணாகரத் தொண்டைமானைக் கதைநாயகனாகக் கொள்வதற்கு உரிய காரணங்கள் யாவை? சோழ மாதாவைக் காப்பாற்றினானே, அதற்காக அவன் நாயகனாகி விடமுடியுமா? அது, அவனது மனிதத் தன்மையில் எழுந்த கடமை சூழ்ச்சியின் சூத்திரக் கயிறாக இயக்கப்பட்டு நாடகமாடினனே அவன்?-சோழ மண்ணில் பிறந்த நாட்டுப்பற்றின் தூண்டுதல் அது. இளவரசியின் இதயத்தில் அவன் இடம்பெற்றானே?-முன்னைப்பழ வினையின் பின்னே வழிப்பயன் ஆயிற்றே அது?

செம்பியர்க் கோமான் ‘விரிபுகழ்க் காவிரி நாட்டு’க் கோமான் அல்லவா? அவரைத்தான் இந் நவீனத்தின் நாயகனாக நான் கருதுகிறேன். ‘கலிங்கம் எறிந்த கருணாகரன்றன் களப்போர்’ நிகழ்ச்சிகளுக்கு வழிவகை அமைத்துக் கொடுக்கிறாரே, அதற்காகவா?-அல்ல!... ‘உறுபகை ஊக்கம் அழிப்பது அரண்’ என்ற தமிழ்மறை வரிக்கு வாழ்வு தர எண்ணி, அங்கே கோட்டை அமைக்கும்

123