பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெரிந்தவன்தானா? யாரோ கிளப்பிவிட்ட அபவாதத்தை உண்மையென நம்பி, சிந்தாமணியைக் குற்றவாளிக் கூண்டிலே ஏன் நிறுத்தினான்?

‘செப்புச் சிலையே, செந்தமிழே!’ என்றெல்லாம் பாடக்கேட்டு வளர்ந்த பாவை சிந்தாமணி. ஆனால், மகளை ஐயுறுகின்றனர் பெற்றோர். நோய் தீர்க்கும் மருத்துவமனையில், கன்னிப்பெண் சிந்தாமணி தாயாகக் காட்சியளிக்கிறாளென்று அயலவர் சொன்னால், அதைக் கேட்டு நம்பவேண்டுமென்று ‘நூற்றி நாற்பத்து நான்கு’ உத்தரவுக்குக் கீழ்ப்பட்ட அழகப்பன் நம்பட்டும். அதற்காக, சிந்தாமணியின் தங்தை சிவநேசர் அந்த ஏச்சையும் பேச்சையும் நம்பவேண்டுமா? ஆம்; நம்பவேண்டும். இது நாவலாசிரியரின் ஆணை. ஏனென்றால், சிவநேசரை ஆட்டிப் படைக்கின்றார் ஆசிரியர். இல்லையென்றால், சிவபக்தரான சிவநேசர் இவ்வாறு சொற்பொழிவு செய்திருக்கக் கூடுமா?

“நாள், நட்சத்திரம், சாமி, கோயில், ஜெபம், தபம் இப்படி யெல்லாம் நம்பிக் கடைசியில் கெட்டுப்போனேன். நான் நம்பிய நாளோ, நட்சத்திரமோ, கோயிலோ, தெய்வமோ எதுவுமே என்னையும் என் குடும்பத்தையும் கெளரவமாக வாழ விடவில்லை. என் மகள் எப்படி விபசாரியானாள்? எப்படி கள்ள அபின் கடத்தும் கைகாரியானாள்? தெய்வம் ஊமையாகிவிட்டது! நான் உயிரோடிருந்தால், இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே மனத்தை அலட்டிக் கொண்டிருப்பேன். இந்தக் கேள்விகளிலிருந்து என் உள்ளத்தையும் தெய்வத்தையும் விடுவிப்பதற்காகவே பிணமாகிவிடுகிறேன். சிந்தாமணி மாசற்றவள் என்று எப்போதாவது உண்மையிலேயே நிரூபிக்கப்-

152