பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆடலழகி செங்கமலத்தின் கடைக்கண்ணில் எழுத்தாளன் மனம் சிக்குண்டு சொக்கித் துடிக்கிறது. அவளே ஒடி வருகிறாள்! எழுத்தாளன் தணிகாசலம் தன்னை மறக்கிறான்! ஆனால் ஊரும் உலகமும் செங்கமலத்தின் தாயும் மறந்துவிடவில்லை. செங்கமலம் ஜமீன்தார் ஒருவருக்கு மாலையிடுகிறாள் எழுத்தாளன் மனம் உடைந்து கசிகிறது. ஆம்; அவன் இன்னும் குழந்தைதான்!

தன் சிற்றுருக்கு வருகிறான் தணிகாசலம், வேலை போன பின்பு. அத்தை மகள் கெளரி ‘அத்தான்’ என்கிறாள்! அவளுடைய காதலின் வேகம் அவனைத் திகைப்புறச் செய்கிறது. தேவகி அக்காளின் உதவியுடன், மேளம் முழங்க எழுத்தாளன் தாலியைக் கட்டுகிறான்.

பல சிக்கல்களில் அல்லாடுகிறான் எழுத்தாளன்! உலகம் தன் போக்கிலேயே போய்க் கொண்டிருக்கிறது! குற்றாலம் போகிறான். எழுத்தறிஞர் ஒருவரைக் காண! அங்கு ரசிகை ஒருத்தியைச் சந்திக்கிறான். அவள் கனவின் கனவு! எழிலின் எழில்! அவள்தான் நாயகி-உமா!

இப்பொழுது கற்பனையாளன் தணிகாசலத்தின் ஈடுபாடு உமாவிடம் திரும்புகிறது. உமா அவனில் சுழன்றாள். ‘மாமா’ என்று அழைத்தாள். அந்த அழைப்பில் அவள் உயிர் சிலு சிலுத்தது.

ஆண்டவன் விளையாடுகிறான். உமாவின் குடும்பத்தார் தணிகாசலத்தைத் ‘துரோகி’ என்-

158