பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொன் வயலும், புதுப்பட்டியும் கற்பனையில் வாழும் இடங்கள் ஆகும். ஆனால், மையத்தில் குறுக்கிடும். 'திருச்சிச் சந்திப்பு' மட்டும் உண்மைப் பெயர் மறந்துவிடப் போகிறீர்கள்!

இந்தக் கண்ணபுரத்தில் தணிகாசலம் வாழ்கிறான். நீங்கள்தான் ஆசிரியருடன் கண்ணபுரத்துக்குச் சென்று திரும்பியவர்கள் ஆயிற்றே!


விந்தை மனிதன்!

ரண்டாவது உலக மகா யுத்தத்தை தணிகாசலம் ஒருபோதும் மறக்கமாட்டான். ஏனென்றால், அன்றையச் சூழலில் அவன்தான் அவனுக்கு நாயகன்; இந்நாவலின் ஆசிரியருக்குக் கதாநாயகன். கெளரிக்கும் உமாவிக்கும் கணவன். இங்கேயும் ஒரு விந்தையைப் பார்க்கிறோம். வேடிக்கையான மனிதன் இந்தத் தணிகாசலம். இல்லையென்றால், தேவகியும் செங்கமலமும் இந்த ‘அறியாப் பிள்ளை’யை இப்படி ஆட்டிப் படைத்திருப்பார்களா? ஆன்மீக வளர்ச்சிக்குப் பரிபக்குவமடைய 'வெறும் ஏடுகளை' நம்பின இவனது மனித மனத்தில் அறிவுக்கும் உணர்ச்சிக்கும் போராட்டங்கள் மூண்டிருக்க முடியுமா? நிதரிசனமான வாழ்வுக்கும் கனவு நிலை கொண்ட தர்க்கத் துக்கும் வாதப் பிரதிவாதங்கள் தாம் முளைத்திருக்குமா?

சரி; யார் இந்தத் தேவகி போகட்டும்; செங்கமலம் யார்?


பேனா!

இன்றைக்குப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஒருவரின் நிழற்படத்தை வார ஏடொன்றில் பார்த்தேன். அன்றொரு

163