பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலகை மறுக்கிறது. அவளைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகின்றதாம் அவனுக்கு!

‘எனக்கு உன்னைத்தவிர வேறு வழியில்லை!’ என்று எல்லாவற்றையும் துறந்து பேசினாள் ‘எல்லாம் முடிந்து பட்ட’ தேவகி.

தணிகாசலத்தின் கண்ணீரைத் துடைக்கும் பேறு பெற்றாள் தேவகி. அவனுடைய திறந்த மனத்தினின்றும் அவனுக்குரிய கள்ளமிகு சபலமனம் வெளியேறியது! அவள் என் ‘பார்வை’க்குத் தமிழ்ப் பெண்; தணிகாசலத்திற்கு தேவகி அக்காள்.


நாயக-நாயகி

பாவை விளக்கில் நீங்கள் யாரைக் கதாநாயகியாக மதிக்கிறீர்கள்?”

எண்ணிப் பார்க்கிறேன். தாமஸ் ஹார்டி படைத்த பாத்திரங்களிலே என்னைக் கவர்ந்த பெண் மேரி. காதலில் தோற்றவள். ஆனால் அவள் மடிந்த கல்லறையின் உள்ளே அவளுடைய காதல் தூங்கிக் கொண்டிருக்கிறது. கல்லூரி வாழ்வு கழிந்தும் கூட அவளைப்பற்றிய நினைவை என்னால் துறக்கக் கூடவில்லை. இந்நினைவு கிளர்ந்தெழும் நிலையில், எனக்கு வேறொரு மதிப்பீடும் நெஞ்சில் இழை யோடுகிறது. ‘சிநேகிதி’ என்பது பாலாம்; அந்தப் பாலில் தண்ணீரைக் கொட்டிக் கலந்ததாம் ‘பாவை விளக்கு.’ வேறு யார் இப்படி எழுதப் போகிறார்கள்? ‘அவர்’தான் எழுதியிருக்கிறார்!

கதாநாயகிக் குழப்பத்துக்கு விடிவு காண வேண்டும். தணிகாசலத்தைக் காட்டிலும், ஏன், திரு அகிலனைப்

167