பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்கக்கூடும். ஆகவே சீதாவுக்கு டில்லிமாநகரம் அடைக்கலம் தந்தது! தவறு. அவளுக்குத் தஞ்சம் தந்தவன் அவள் மணாளன் ராகவன். ஆங்கிலமோகம் கொண்டவன் அல்லவா ராகவன்? ஆகவே, அவளை ஆங்கிலேயர் ஹோட்டல் ஒன்றில் தங்கவைத்தான். டில்லிமாநகரம் கந்தர்வ லோகமாயிற்று! பிறகு, சீமைக்குப் புறப்பட வேண்டியவனானான். சீதாவுக்குச் சென்னை நிழலாயிற்று. பதினைந்து மாதங்களுக்குப் பிறகு ராகவன் தாயகம் திரும்பியதும், சீதா கணவனிடம் திரும்புகிறாள், குழந்தை வாஸந்தியோடு. அன்னை காமாட்சியம்மாளும் சேர்த்தி!

பெண்கள் வீட்டுக்குள்ளே இருந்து வாழ்க்கை நடத்துவதுதான் நியாயம்!-இது ராகவனின் கட்சி.

மீண்டும் புதுடில்லிக்குச் சீதா வந்துசேருகிறாள். அவளுடன் தொடர்ந்து ‘உம்மைப்பழவினை’யும் வருவதை அவள் எங்ஙனம் அறிவாள், பாவம்? புதுடில்லியில் அழகழகான சதுக்கங்களிலும் இடிந்த கோட்டைகளிலும் இடியாத அரண்மனைகளிலும் தன் தர்ம பத்தினியின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இன்பமாகப் பொழுதைக் கழித்தான் ராகவன். முதன்முதலில் சீதா வந்த தருணம் இவை கடந்தேறின. அம்மாதிரி இம்முறையும் சென்று கழிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள் சீதா. இயல்பு. ஈடேறவே செய்தது.

பிறவாவரம்!

பிறப்பறுக்க வேண்டித் தவம்கிடந்தார்கள், வாழ்வைத் துறந்தவர்கள். பிறவா வரம் வேண்டினார்கள் பெம்மானிடம்.26