பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


விமர்சனம் எழுதியிருக்கிறார். அதன் தொடக்கம் இவ்வாறு அமைகிறது:

“டைரி எழுதுகிற லட்சிய வாலிபனும், தெருவில் கார் மோதி மயங்கி விழுகிற லட்சிய ‘வாலிபி’யும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்குமோ, அதுதான் நடக்கிறது ‘குறிஞ்சி மலரி’ல், காதல் பிறக்கிறது; ஆனால் இருவரும் லட்சிய ஜன்மங்கள் ஆயிற்றே! காதல் பூர்த்தியாகலாமா?”

“பூரணியையும் அரவிந்தனையும் வைத்து ‘மணி வண்ணன்’ (அல்லது நா. பார்த்தசாரதி) 560 பக்கங்கள் எழுதியிருக்கிறார், வளவளவென்று அடிக்கொருதரம் ஆச்சரியக் குறியிட்டு, பக்கத்துக்கு நாலுதரம் வாசகர்களைக் கிள்ளி அழவிட்டுக்கொண்டு, தானும் அழுது கண்ணிர் வரவழைத்துக் கொண்டு எழுதியிருக்கிறார். ஐம்பது பக்கத்தில் முடித்திருந்தால், முதல்தரமான கதையாக இல்லாவிட்டாலும், சுமாரான கதையாக இருந்திருக்கும். ஐநூறு பக்கத்தில் தமிழ் நாட்டின் சாதாரணத் தொடர்கதையாக, வாசகர்களுக்கு மிகவும் விருப்பமான தொடர்கதையாக உருவாகியிருக்கிறது.”

மதிப்புக்குகந்த க. நா. சு. நான் சொன்ன அந்த மூன்று குணநலன்களைக் கோட்டைவிட்டு விடுவாரா? மாட்டார், மாட்டவே மாட்டார்!...


பிறப்பு என்பது பொய்

பிறப்பு என்பது பொய்; இறப்பு என்பது மெய்.

இந்தப் பொய்யும் இந்த மெய்யும் பொய்ம்மையின் விளையாட்டாகவும், மெய்ம்மையின் விளையாட்டாகவும்

49