பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பிறந்த மண்: மதுரை.

திருவிளையாடற் புராணத்தில் மதுரைத் திருககரைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு பேசப்படுகிறது:

மங்கலத்தை இடையறாது பூண்ட பாண்டிய நாடாகிய பெண்ணுக்குப் புறத்திலிருக்கும் நகரங்களெல்லாம் வளையல்கள் அசைகின்ற கைகள், தோளிணைகள், பெரிய தனங்கள் முதலாகிய உறுப்புக்களாம்.பெண்ணின் அத்தன்மையுள்ள பெருமை பொருந்திய முகமாகிய நகரம் திருவாலவாய், இது இரத்தினங்களின் நடுவிலிருக்கும் பதக்கத்தின் பெரிதாகிய நாயக ரத்தினத்தை ஒப்பதாம். இந் நான்மாடக் கூடல் திருமகளுக்கு ஒரு செந்தாமரைக் கோயிலாகவும், திருமால் மருமகளான சரஸ்வதிக்கு வெண்டாமரை ஆலயமாகவும், ஞானந் தரும் சிவசக்திக்கு ஒப்பற்ற யோகபீடமாகவும், பெருமை பொருந்திய பூமி தேவிக்கு நெற்றித் திலகமாகவும் விளங்குகின்றதாம்!

இத்துணை பீடுபெற்ற மதுரையம்பதியில் தான் தமிழ் வாழ்ந்தது. வாழ்ந்த தமிழுக்கு வாழ்த்துத் தரும் வகையில் அழகிய சிற்றம்பலம், அழகிய சிற்றம்பலம் என்ற நா மணக்கும் நாமம் பூண்ட பேராசிரியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய அன்புத் திருமகள்தான் பூரணி, காலமெனும் மணல் வெளியில் தாம் பதித்துப் பிரிந்த அடிச்சுவடிகளைச் சேமநிதியாக்கிய பெருமையுடன் அழகிய சிற்றம்பலம் புகழுடம்பெய்திவிட்டார். அவர் விடுத்துச் சென்ற பாததூளிகளிலே தமிழ் மணந்தது. அதுமட்டுமன்று தமிழ் பேசியது. அத்தகைய ‘தமிழ்’ வளர்த்த செல்வப் புதல்வி பூரணி. அவள் அறிவின் திருவுருவம். அறிவு மட்டும் இருந்தால், இந்த விண்வெளிக் கப்பல் விளயாட்டு யுகத்தில் பெண் முழுமை எய்திவிட

52