பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சீதாராமன் வருகிறான். நளினியை மணக்க விரும்புகிறான். நளினியின் தந்தை விஸ்வநாதய்யர் மகளிடம் உடன்பாடு கேட்கிறார். நளினியோ, “போ அப்பா...!” என்கிறாள் நாணத்தின் மென்மையுடன். ‘திருமணத்துக்கு முன் சீதாராமன் அயோக்கியனா என்று தெரிந்து கொள்ளாவிடில் ஆயுசு பூராவும்...?’என்று கலங்கினாள் நளினி. ஆனால், அதை அறிய வாய்ப்பே இல்லை! திருமணம் நடக்கிறது. மருண்ட பார்வையோடு சீதாராமனைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த நளினியைக் கண்ட மணமகனுக்கு அமைதியே இல்லை.

மணமான உடனே நளினியை இழுத்துக் கொண்டு தஞ்சாவூருக்கு வருகிறான் சீதாராமன். இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம், அப்போதே அவளை அவன் ஆசையோடு நெருங்கிய சமயம், அவள் பழைய குருசாமியை நினைவு படுத்தி ‘நீதான் திருடனா?’ என்று கேட்காமல் கேட்கிறாள். முதலிலே கசக்கிறது சீதாராமனுக்கு. பின் வழித்துணை கொண்டு தஞ்சையை அடைகின்றனர், அடைந்திட்ட புதுமணக் கோலம் பூண்டு!

தஞ்சை வந்த நேரம் அந்தி மாலை. “அந்தப் பழைய கதையையெல்லாம் நீயும் நானும் மறந்து விடுவதே நல்லது” என்கிறான் கதாநாயகன்!

88