பக்கம்:கல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 11

 மணவாழ்க்கை கேவலம் வெறும் ஜோடி சேரும் பொம்மலாட்டம் அல்ல காமக்களி யாடல்களுக்கு மட்டுமே உரிய லீலை யல்ல. குற்றப்பத்திரிகை வாசிக்க அமையும் நீதி மன்றமல்ல. ஸ்டன்டுகளுக்கும் வக்கிர வேடிக்கைகளுக்கும் திறப்பு விழாச் செய்யும் சர்க்கஸ் அல்ல. பம்மாத்தும் பசப்புதலும் ஏய்த்தலும் ஏமாற்றும் நிறைந்த சினிமா அல்ல.
 இந்த ரகமான பல்வேறு பண்புகளின் சாயை படிந்திருக்கலாம் என்றாலும் அவனும் அவளும் இன்பம்ாக மனே அமைதியுடன் வாழ வேண்டு மானால், ஒரு கோணத்தை மட்டும் கண்டு அழுத்தமாக நின்று புழுங்கிப் பொருமுதல் கூடாது. சில சமயங்களில் 'கண்டும் காணுதது போல்' போக வேண்டிய அவசியம் எழும். பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் தாராளமும் வேண்டும்.
 கணவன் அறிவு, உணர்ச்சி, சிந்தனை இவற்றின் தொகுப்பு. மனைவி உணர்ச்சிகளின் உயிர்ப்பு. இவ்விருவர் வாழ்விலும் மனம் என்கிற தத்துவம் எவ்வளவோ சித்து விளையாடல்கள் புரிகிற மாயா ஜாலம். குறைகளை மறந்து நிறைவுகளை வளர்க்கும் பண்பை அளிக்கக் கூடியது களங்கமிலா அன்புதான். 
 பெரியவர்களாகப் பார்த்து ஜோடி சேர்த்து விடுகிற கல்யாணம் மட்டுமே படுமோசமாகி விடுகிறது என்று குறை கூற முடியாது.
 கண்டதும் காதல், காணாமலே காதல், கேட்டதும் காதல், கேளாமலே காதல், கார்டு கவர் மூலம் காதல், தந்திக் காதல், டெலிபோன் காதல், போட்டோக் காதல்-இன்னும் எத்தனை எத்தனை