பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

дѣлетарна பரசுராமனும் - அ. சீனிவாசன் 23 பல அறிஞர்களும் பெரியோர்களும், அமைப்புகளும் இப்போது கம்பன் புகழ்பாடி கன்னித் தமிழ் வளர்க்க முனைந்துள்ளார்கள். அவர்களுடைய அரும்பணி மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. செட்டி நாட்டுப் பெருநகரம் காரைக்குடியில் பல ஆண்டுகளாக சா.கணேசனார், ராய.சொக்கலிங்கனார் முதலானோர் மற்றும் பல சான்றோர்கள் வழியில் இந்து மதாபிமான சங்கமும் கம்பன் கழகமும் அமைத்து ஆண்டு தோறும் அறிஞர் பலரையும் அழைத்து சொற்பொழிவுகளும் இதர பல கம்பன் காவியம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தியும் கம்பன் விழா மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். அதே போல தமிழகத்தில் சென்னை, புதுச்சேரி, கோயமுத்துர், அருப்புக் கோட்டை, இராமநாதபுரம் திருப்பத்துார் மற்றும் பல மார்களிலும் பல அறிஞர்கள் சேர்ந்து கம்பன் கழகங்கள் அமைத்து பல சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் விழாக்கள் நடத்தியும் தமிழ்த் தொண்டு ஆற்றி வருகிறார்கள். மற்றும் மும்பாய், டில்லி, கொல்கத்தா, ஆமதாபாத் முதலிய பல நகரங்களிலும் வாழும் தமிழ் மக்கள் தமிழ் சங்கங்கள் அமைத்து கம்பன் விழா நடத்தி கம்பன் காவியச் சிறப்புகளைப் பரப்பி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ஜெயவிலாஸ் குழுமத்தின் தலைவரும், ரீராமலிங்கா மில்ஸ் அதிபரும் சிறந்த கல்வியாளரும் தேசபக்தரும் தெய்வபக்தருமான ஆன்மீகச் செல்வர் டி.ஆர்.தினகரனார் அவர்களின் தலைமையில் கம்பன் கழகம் அமைக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பின் சார்பில் அருப்புக்கோட்டை நகரில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளன்று கம்பராமாயணம் குறித்து பஜனையும் பல அறிஞர்களை அழைத்துச் சொற்பொழிவுகளும் நடத்தி வருகிறார்கள். அந்த சேவையின் தொடர்ச்சியாக சென்ற வைகாசி மாதச் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி (30,05,2003) வெள்ளிக் கிழமை