பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. யுக சந்திப்பு 56 எங்களைப் போன்ற எளியவர்களிடம் சண்டைக்கு வருவது நியாயமா? எளியோரை வலியார் வந்து மோதலாமா? என்று பரசுராமனிடம் காலில் விழுந்து தசரதன் அபயம் கேட்டான். தசரதன் பரசுராமனிடம் அபயம் கேட்டுப் பேசிய போது இராமன் தீவினைகள் எதுவும் செய்யவில்லை. செல்வச் செருக்கால், இராமன் தவறுகள் இழைத்துத் தனது அரசக் கடமைகளை மறந்து விடவில்லை என்றும் குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது. பரசுராமர் ஆயிரக்கணக்கில் கூத்திரிய அரசர்களைக் கொன்று தீர்த்தவர் என்பது புராணச் செய்தியாகும். தீவினைகள் செய்த மன்னர்களும், செல்வச் செருக்காலும் அதிகார மமதையாலும் தனது அரசக் கடமைகளை மறந்த மன்னர்களும் தாங்கள் வல்லவர்கள் எனக் கருதி அகங்காரம் கொண்டிருந்த அரசர்களும் பரசுராமனுடைய மழுவாயுதத்திற்கு இலக்கானார்கள் என்னும் உண்மையும் வெளிப் படுகிறது. அபயம் எனக் கூறி தன் கால்களில் விழுந்த தசரத மன்னனையும், அவன் கூறிய வார்த்தைகளையும் பரசுராமன் சட்டை செய்யவில்லை. அவர் இராமனைப் பார்த்தே பேசினார். பரசுராமன் இராமனிடம் பேசுகிறார், நீ மிதிலையில் ஒடித்த வில் முன்பே முறிவுபட்ட வில். இதோ என் கையில் உள்ள வில்லும் அதுவும் ஒன்றாகப் பிறந்தவை. அதைச் சிவபெருமானும் இதைத் திருமாலும் ஏந்திப் போர் புரிந்தனர். சிவபெருமான் வில் முறிந்தது. அதனை அவர் இந்திரனிடம் கொடுத்தார். அதுவே மிதிலையில் இருந்த வில். திருமால் தனது வில்லை இருசிக முனிவரிடம் தந்தார். அவர் அதை என் தந்தையிடம் அளித்தார். என் தந்தை அவ்வில்லை என்னிடம் கொடுத்தார். அதுதான் இந்த வில் என்று கூறி பரசுராமன் தன் கையில் இருந்த வில்லை இராமனிடம் நீட்டிப் பேசினான். “உலகெலாம் முனிவற்கு ஈந்தேன். உறுபகை ஒடுக்கிப் போந்தேன்