பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(II молодшолму 4 புகுத்திய ஆங்கிலக் கல்வி முறையும் நமது நாட்டிற்கு பெரும் கேடுகளை விளைவித்தன. ஆங்கிலேய அந்நிய ஆட்சியாளர்களையும் அவர்களுடைய ஆக்கிரமிப்புகளையும் நமது நாட்டு மக்கள் எதிர்த்த போது ஆங்கிலக்கல்வியாளர்கள், தங்கள் கல்வி நிலையங்கள் கல்விச் சாலைகள், கல்லூரிகள், பாடத் திட்டங்கள் மூலம் நமது நாட்டு வரலாற்றையே புரட்டிக் கூறி, நமது நாட்டில் உள்ள அனைவருமே வெளியே இருந்து வந்த அன்னியர்கள்தான் என்றும், நமது வரலாற்றியலில் ஒரு கதையைக் கட்டிவிட்டு நமது நாட்டின் ஆங்கிலப்படிப்பாளிகளிடம் அந்தக் கட்டுக்கதை வரலாற்று விஷவித்துக்களை விதைத்து விட்டார்கள். அசிரிய போன்ற நாடுகளிலிருந்து போலன் கணவாய் வழியாக திராவிடர்கள் இந்தியாவிற்குள் வந்து குடியேறி சிந்து சமவெளி நாகரிகத்தை உண்டாக்கினார்கள் என்றும், கைபர் கணவாய் வழியாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்து திராவிடர்களைத் தெற்கே விரட்டிவிட்டு அவர்கள் வடக்கே குடியேறினார்கள் என்றும், பின்னர் கிரேக்கர்கள் இந்தியா மீது படையெடுத்தார்கள் என்றும் அதன் பின்னர் மேற்கு ஆசியாவிலிருந்து சுல்தான்கள் படையெடுத்து, டில்லியில் சுல்தான் ஆட்சி ஏற்பட்டது என்றும், பின்னர் மோகலாயர்கள் படையெடுத்து தங்கள் ஆட்சியை இந்தியாவில் நிறுவினார்கள் என்றும், பின்னர் ஐரோப்பியர் வருகை ஏற்பட்டு ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டது என்றும், இவ்வாறு இந்த நாடு அதுவரை ஒற்றுமையின்றி பலவேறு இந்து, முஸ்லிம் மன்னர்கள் நவாபுகளாக சண்டையிட்டுக் கொண்டு சிதைந்து கிடந்தது என்றும் ஆங்கிலேயர்கள் வந்து தான் தங்கள் ஆட்சி மூலம் இந்த நாட்டை ஒற்றுமைப் படுத்தினார்கள் என்றும் நாகரிகமில்லாத இந்திய மக்களை நாகரிகப் படுத்தினார்கள் என்றும் கூறிக் கொண்டு இந்து முஸ்லிம் சண்டைகளையும், ஆரிய திராவிட இனவாதங்களையும் உண்டாக்கி இந்திய மக்களிடையில் குறிப்பாக படித்தவர்கள் ஒரு பகுதியினரிடையில் விஷக்கருத்துக்களை விதைத்து விட்டார்கள். அந்த விஷ விதைகளின் தீய விளைவுகள் பெரும்பாலும் பாரத மக்களால் நிராகரிக்கப்பட்டு வந்தபோதிலும், இன்னும் சில எச்சங்கள்