பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 للاتت لكن انتشلي நீடித்து வருகின்றன. சில பெரிய மனிதர்கள் இன்னும் கைபர் கணவாய் என்றும் ஆரிய திராவிட இனவாதம் பேசி வருகிறார்கள். அந்த அறியாமைக் கருத்துக்களை அகற்றவேண்டியது அவசியமாகும். - இத்தகைய ஆங்கில சிந்தனையாளர்களின் பிரிவினைக் கருத்துக்கள் எல்லாம் இன்று காலம் கடந்து போய் பொய்யாகி மறைந்து வருகின்றன. இன்று பாரதத்தின் ஒற்றுமை ஒன்றிணைப்பு என்னும் கருத்துக்களே வெற்றி பெற்று மக்களிடம் ஆழப்பதிந்து வருகின்றன. பாரத தேசத்தின் நீண்ட வரலாறும் பாரம்பரியமும் கலாச்சாரமும் பற்றிய தெளிவான விவரங்களும் உண்மைகளும் வெளிப்பட்டு வருகின்றன. நமது நீண்ட வரலாற்றில் சில மேடுபள்ளங்கள் இருந்திருக்கின்றன. மகாகவி பாரதி மிகவும் அற்புதமாக நமது நாட்டின் ஒரு பாரம்பரிய உண்மையை தனது பாடல் வரிகளில் மி கவும் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். “நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரிவாள் எங்கள் தாய் - அவர் அல்லவராயின் அவரை விழுங்கிப்பின் ஆனந்தக் கூத்திடுவாள்” என்று நமது பாரத அன்னையின் குணம் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த அருமையான சொற்களை நாம் நூறாயிரம் தடவைகள் ஆனாலும் படித்து அவைகளை நமது மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். பாரத மக்களிடம் இச்சீரிய கருத்தை விரிவாகப் பரப்பவும் வேண்டும். அறம்வெல்லும் பாவம் தோற்கும் என்பதும், துஷ்டநிக்ரக, சிஷ்ட பரிபாலன, அதாவது தீயோரை மாய்த்து நல்லோரைக் காப்பது என்பதும் நமது நாட்டின் தெய்வீகக் குரல்களாகும். “பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்கிறேன்.