பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


47 கூற' என்று காணப்பெறுகிறது. இதனுன் நம்மாழ்வார் அருளியவற்றை மறையாகவும், திருமங்கை மன்னன் அருளியவற்றை ஆறங்கம் ஆகவும் முன்னேயோர் கருதி னர் என்றறியலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமங் கை யாழ்வாரது திருப்பாடல்களுள் திருநெடுந்தாண்டகம் விண்ணப்பம் செய்வது குறித்துத் திருக்கோவலூர்க் கல்லெழுத்தொன்று (126 of 1900; S. T. I. VII 139) குறிப்பிடுகின்றது. திருக்கோவலூர்த் திருவிடைகழி ஆழ்வார்க்குத் திருவோணம் திருவேட்டை நாளில் நைவேத்தியத்திற்குத் திருக்கோவலூர்ச் சபையினர் நிலம் விற்றனர். இந்தத் திட்டத்தில் திரு நெடுங் தாண்டகம் ஒதுவதற்கு இடம் கொடுக்கப்பெற்றது. இத்திரு வோலக்கத்திலே திருநெடுந்தாண்டகம் விண்ணப்பம் செய்வார்க்கு ஒருகாசு இடுவதாகவும் ' என்பது கல்லெழுத்து வாசகம். இத்தருமத்தை வைகாஸ்நர் 2 நடத்த வேண்டும் என்று இக்கல்லெழுத்தில் உள்ளது. திருவாய்மொழி இதனை அருளிச் செய்தவர் நம்மாழ்வார் ஆவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநகரி எனப் பெறும் திருக்குருகூரில் பிறந்தவர்; அவ்வூர்த் திருமால் கோயிலில் வடபுறத்துள்ள திருப்புளியின் கீழ் யோகிருந்து திருமால் திருவருளே நிரம்பப் பெற்றவர். இவருடைய பிரபந்தங்கள் திருவாசிரியம், திருவாய்ம்ொழி, திரு விருத்தம், பெரிய திருவந்தாதி என்பன. இவை நான்கும், நான்கு வேதங்கள் என்று போற்றப்படும் பெருமையுடை 2. வைகாஸ்னர் - வைகானசர் - வைகானசம் என்னும் வைணவ ஆகமத்தின்படி ஒழுகுபவர்.