பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


49 வற்றைக் கற்பிக்கும் கல்வி நிலையத்தை நடத்துவதற்கு மாக, 46 வேலி நிலம், இராஜராஜ விண்ணகர்க்கு அளித்த செய்தியைக் கூறுகின்றது. மேலே கூறப்பெற்ற இராசேந்திரன் மகளுகிய முதல் இராசாதிராசனது 30 ஆம் ஆண்டுக் கல்லெழுத்து (176 of 1919) திருபுவனியில் உள்ளது. உம்பள நாட்டு மூவேந்தவேளான் என்பவர், இராசேந்திரன் திரு நாமத்தால் எடுப்பித்த மண்டபத்தில் அவ்வூர்ச் சபை யினர் கூடினர்; சேனுபதி இராசேந்திரசோழ மாவலி வாணராசர் சில தருமங்களை நடத்துவதற்கு அளித்த 72 வேலி நிலத்தை ஏற்றுக்கொண்டனர். நிலவருவாய் 12,000 கலம்; இதில் திருவிழாக்கள் நடத்தவும், நூவைஷ்ணவர்களுக்கு உணவு அளிக்கவும், திருவாய் மொழி விண்ணப்பம் செய்யவும் 2475 கலம் நெல் பயன்படுத்தப் பெற்றது. எஞ்சிய நெல் ஒரு பெரிய கல்லூரி நடத்தப் பயன்படுத்தினர். இரண்டாம் இராசாதிராசனது 8 ஆம் ஆண்டுக் குரிய கல்வெட்டினின்று திருக்கோவலூரில் திருவாய் மொழி விண்ணப்பம் செய்ய ஒருபெண் ஏழுகழஞ்சு பொன் கொடுத்த செய்தியை அறிகின்ருேம் (343 of 1921). தஞ்சை மாவட்டத்துத் திருக்கண்ண புரத்துக் கல்வெட்டொன்று (503 of 1922) ஒரு அரிய செய்தியை அறிவிக்கிறது. சித்திரை மாதத்தில் கலியாணத் திருவிழா, 5 ஆம் திருவிழா நீராவி மண்டபத்தில் இராவணுந்தகன் என்ற பீடத்தில் திருமால் தம் இரு பத்தினிமார்களோடு வீற்றிருந்து சடகோபர் அருளிய பிரபந்தங்களைக் கேட் 4.