பக்கம்:கல்விச் செல்வம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

வண்ணக்களஞ்சியம்


நாலடி

கல்வி கரையில, கற்பவர் நாள் சில
மெல்ல நினைப்பின் பிணிபல- தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பால் உண் குருகில் தெரிந்து.

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுணராக் கேடுஇன்றால்
எம்மை உலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு

கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாளர் இடைப்புக்கு-மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே; இராஅது
உரைப்பினும் நாய்குரைத்து அற்று.

பல்லான்ற கேள்விப் பயன்உணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வது அறிதிரே-கல்லாதார்
சேதனம் என்னும் அச் சேறகத்து இன்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று.

பழமொழி

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை அந்நாடு
வேற்றுநாடு ஆகா தமவேயா மாயினால்
ஆற்றுணா வேண்டுவது. இல்.
சொல்தொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றொன்று அறியுமேல் கற்றொறுந்தான் கல்லாத ஆறு.