பக்கம்:கல்விச் செல்வம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

வண்ணக்களஞ்சியம்


கல்வியுடைமை பொருளுடைமை யென்றிரண்டு
செல்வமுஞ் செல்வ மெனப்படு-மில்லார்
குறையிரந்து தம்முன்னர் நிற்பபோற்றாமும்
தலைவணங்கித் தாழப் பெறின்,

நீதிவெண்பா,

வல்லவர்பாற் கல்வி மதமான வம்போக்கும்
அல்லவர்பாற் கல்வி யவையாக்கும்- நல்லிடத்தில்
யோகம் பயில்வாருயர்ந்தோ ரிழிந்தோர்கள்
போகம் பயில்வார் புரிந்து.

தீயவர்பாற் கல்வி சிறந்தாலு மற்றவரைத்
தூயவரென்றெண்ணியே துன்னற்க- சேயிழையே
தண்ணொளிய மாணிக் கஞ்சர்ப்பந் தரித்தாலு
நண்ணுவரோ மற்றதனை நாடு.

போற்றுகுருகிளைஞர் பொன்னாசையோர்க்கில்லை
தோற்று பசிக்கில்லை சுவைபாகந்- தேற்றுகல்வி
நேசர்க்கிலை சுகமு நித்திரையுங் காமுகர்தம்
ஆசைக்கிலைபயமா னம்.

கல்லாடம்

நிலையினில் சலியா நிலைமை யானும்
பலவுலகு எடுத்த ஒருதிறத் தானும்
நிறையும் பொறையும் பெறுநிலை யானும்
தேவரும் மூவரும் காவ லானும்
தமனியப் பராரைச் சைல மாகியும்
“அளக்க என்று அமையாப் பரப்பின தானும்”
அமுதமும் திருவும் உதவுத லானும்
பலதுறை முகத்தோடு பயிலுத லானும்
முள்ளுடைக் கோட்டு முனைஎறி சுறவம்
அதிர்வளை தடியும் அளக்கர் ஆகியும்