பக்கம்:கல்விச் செல்வம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விச் செல்வம்

41



தொடங்குங்காற் றுன்பமாயின்பம் பயக்கும்
மடங்கொன்ற றிவதற்றுங்கல்வி-நெடுங்காம
முற்பயக்குஞ் சின்னிரவின்பத்தின் முற்றிழாய்
பிற்பயக்கும் பீழை பெரிது.

கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே யீர்ங்கவியாச்-சொல்வள
மல்லள் வெறுக்கையா மாணவை மண்ணுறத்துஞ்
செல்வமும் உண்டு சிலர்க்கு.

அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார்
அவையஞ்சார் வாகுலச் சொல்லு-நவையஞ்சி
ஈத்துண்ணார் செல்வமு நல்கூர்ந்தா ரின்னலமும்
பூத்தலிற் பூவாமை நன்று.

எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந்
துய்த்துணர் வில்லெனினில்லாகு-முய்த்துணர்ந்துஞ்
சொல்வன்மை யின்றெனி னென்னாம் துண்டேற்
பொன்மலர் நாற்ற முடைத்து.

நெடும்பகற் கற்ற வகையத் துதவா
துடைந்துளா ருட்குவருங் கல்வி-கடும்பக
வேதிலான் பாற்கண்ட வில்லினும் பொல்லாதே
தீதென்று நீப்பரி தால்.

எனைத்துணைய வேனுமிலம் பட்டார் கல்வி
தினைத்துணையஞ் சீர்ப்பா டிலவா -மனைத்த
மாண்பில் லாயின் மணமகன லற்றம்காண்
பூண்ட புலப்படர போல்.

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லான்
மற்றோர ணிகலம் வேண்டாவா-முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா, யாரே
அழகுக் கழகுசெய் வார்.