பக்கம்:கல்விச் செல்வம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

வண்ணக்களஞ்சியம்


மைந்தருக்கு வித்தைபொருள் எழில்கீர்த்தி
சுகபோகம் மற்றும் நல்கும்
தந்தைதாய் குருதெய்வம் தானாகும்
பரதேசம் தனக்கு நட்பாம்
எந்தராசரும் மதிக்கச் செயும்மதற்குச்
சமானம் ஒன்றுமில்லை மேலாம்
அந்தவித்தை கல்லாதான் அறிவிலா
மிருகசெந்து வாகும் தானே.

தனிப் பாசுரத் தொகை

கல்வியே மக்கள்தம் கண்ணே, புலவர்தம்
செல்வியே, மனத்தின் செவ்விய உணவே,
நின்னொடு பயிறல் மன்னிய மாந்தர்
தமக்கும் பிறர்க்கும் தனிப்பே ரின்பம்.
கரும்பயி றற்குக் கைக்கூலி போலத்
தரும்பொருளே, உயர் தகைமுத்தி வித்தே!
பரந்த பாரினும் விரிந்த வானினும்
பாவலர் நூலினும் பரிவுடன் மேவி
ஆவலின் விளையாட் டயர்தரு மங்காய் !

கருத்தினில் களிப்பை உரைப்பை, ஆற்றுரை
கதுமென நின்னைக் கைப்பிடித் தோர்தமக்
கெதுவும் என்கொல் அநேகர்
ஊகமின்றி நாளுலப்பி விட்டனரே.

நீதிநெறிவிளக்கம்.

கடலே யனையம்யாங் கல்வியாலென்னும்
அடலே றனைய செருக் காழ்த்தி-விடலே
முனிக்கரசு கையான்முகந்து முழங்கும்
பனிக்கடலு முண்ணப் படும்.

அறம் பொருளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும் - உறுங்கலலொன்
றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியினுாங்கில்லைச்
சிற்றுயிர்க் குற்ற துணை.