பக்கம்:கல்விச் செல்வம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விச் செல்வம்


விவேகசிந்தாமணி

வெள்ளத்தால் அழியாது வெந்தழலால்
வேகாது வேந்த ராலும்
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும்
நிறைவொழியக் குறைபடாது,
கள்ளத்தார் எவராலும், களவாட
முடியாது, கல்வி என்னும்
உள்ளத்தே பொருளிருக்க உலகெங்கும்
பொருள்தேடி உழல்வ தென்னே.

கயிலாசநாதர் சதகம்.

கடலுலகில் உற்றபொருளுக் குளேநன்மைதரு
கல்விநிலை பெற்ற பொருளாம்
கனலினால் உருகாது புனலினால் கரையாது
கள்ளரால் திருடொனாது,

திடமான ராசாதி ராசரா லும்.அதைத்
தீண்டிச் சிதைக் கொணாது,
செயன்மிக்க மாதரால் சேதமா காதொருவர்
செலவிடில் குறைவுறாதாம்;

அடமிகு சகோதரர்க் கிடமது கொடாததனை
அளவிடவும் முடியாது காண்,
அப் பொருளினிற் பெறாதிப்புவியில் அலைகின்ற
அற்பருறு பயன் என் கொலோ?

கடக யம் உரித்துடலினில் தரித்திருதேவ
கற்பகவிரா சமேவும்
கங்கைபுனை ஈசனே! மங்கை மகிழ்நேசனே
கயிலையங் கிரிவாசனே.