பக்கம்:கல்விச் செல்வம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

வண்ணக்களஞ்சியம்


"வல்லவர்பால் கல்வி மதம் ஆணவம் போக்கும்
அல்லவர் பால் கல்வி அவையாக்கும் -நல்லிடத்தில்!
யோகம் பயில்வார் உயர்ந்தோர் இழிந்தோர்கள்
போகம் பயில்வார் புரிந்து."

வில்லி பாரதம்

குலமிகவுடையர் எழில்மிகவுடையர்
குறைவில் செல்வமும்மிக வுடையர்
தலமிக வுடையர் என்னினும் கல்வி
ஞானமற் பமுமிலா தவரை
வலமிகு திகிரிச் செங்கையாய் முருக்கின்
மனமிலா மலரென மதிப்பேன்
சலமிகு புவியில் என்றனன் வாகைத்
தார்புனை தாரைமா வல்லான்.

நீதிசாரம்.

கன்னிரண்டே யாவர்க்குங் கற்றோர்க்கு மூன்றுவிழி
எண்ணுவிழி ஏழாகும் ஈவோர்க்கு- நண்ணும்
அநந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு
அநந்தம் விழிஎன் றறி.

நீதிவெண்பா

ஆனை மருப்பும் அருங்கவரி மான்மயிலும்
கான வரியுகிரும் கற்றோரு - மானே
பிறந்த இடத்தன்றிப் பிறிதொரு தேசத்தே
சிறந்தஇடத் தன்டறோ சிறப்பு


வாக்குநயத் தாலன்றிக் கற்றவரை மற்றவரை
யாக்கைநயத் தாலறியல் ஆகாதே- காக்கையொடு
நீலச் சிறுகுயிலை நீடிசையா லன்றியே
கோலத் தறிவருமோ கூறு.