பக்கம்:கல்விச் செல்வம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

வண்ணக்களஞ்சியம்


பெரு நீர்மை யுடன்வாழ்க;பேருலகில்
மனிதனாய் பிறந்தும் பேசும்
திருவான மொழிபயிலார் திருவிலிக
ளாயிழிவார் தெளிக தேர்ந்தே.

தேவநேயப் பாவாணர்

குத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார்கல்வி
மிகுத்ததினால் ஏது பயன்?

கோவேந்தன் குறள்

வாழ்க்கைக்கு ஒருவனை வார்த்துப் படைப்பதே
சூழ்கல்வி செய்யும் துணை.

வாழ்வை விளக்குவதாய் செம்மைப் படுத்துவதாய்
வீழ்வைத் தடுப்பது கல்வி.

மாந்தனை மாந்தனாய் மாற்றிடும் கோட்பாட்டை
ஏந்துக கல்விக் குறி.

விரிவும் உயர்வும் பயனுடைய வீச்சும்
தருவது கல்வித் தரம்.

சிறந்ததை மேலும் சிறந்ததாய்ச் செய்யும்
அறந்தானே கல்விக்கு அழகு.

கல்விசேர் வாழ்க்கையே நாகரிக வாழ்க்கை, பின்
புல்லுவது எல்லாம் புறம்.

ஒழுக்க உயர்வுக்குப்_பண்பாட்டின் ஒப்பில்
விழுப்பம் தருவது கல்வி.

தனியாள் உயர்வும் சமூக உயர்வும்
இனிதீயும் கல்விஎழுச்சி.