பக்கம்:கல்விச் செல்வம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

வண்ணக்களஞ்சியம்

 கல்விதான் நமக்குரிய அரசியல் பாதுகாப்பு, இந்த ஓடத்திற்கு வெளியே எல்லாம் வெள்ளக்காடு தான்.

-எச். மான்.

மக்கள் தாங்கள் அறியாதவைகளைத் தெரிந்து கொள்ளும்படி கற்பிப்பது கல்வியின் பொருளாகாது ; அவர்கள் நடையை மாற்றிச் செம்மையாக நடந்து கொள்ளும்படி கற்பிப்பதாகும்.

--இரசுகின்.

முதலாவதாக மாணவன் தன் தாய் மொழியில் புரிந்து கொள்ளவும், பேசவும், படிக்கவும், எழுதவும் நாம் கற்பிக்க வேண்டும்.

-வெல்சு.

ஒழுக்க நெறியின் வளர்ச்சியே கல்வியின் முழுநோக்கம், அல்லது பெருநோக்கமாயிருக்க வேண்டும்.

 - ஓ சீ

சர்வ சனக் கல்வியில்லாமல், சர்வ சன வாக்குரிமை ஒரு தீமையாகிவிடும்.

நன்றாகக் கற்பிப்பதானால் , எதைக் கற்பித்தாலும் எனக்குக் கவலையில்லை.

-டி. எச். அக்சிலி .

கல்வியின் முழுநோக்கம் மன வளர்ச்சியே.

-எர்வுட் ஆண்டர்சன்.

கற்பிப்பதன் இரகசியம் மாணவனுக்கு மதிப்பளிப்பதில் இருக்கின்றது.

–எமர்சன்

தேசங்களுக்கு மலிவான பாதுகாப்பு கல்வி.

-பர்க்.