பக்கம்:கல்விச் செல்வம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விச்செல்வம்

53


மானிட உள்ளத்தின் கல்வி தொட்டிலில் தொடங்குகின்றது.

-டி. கோகன்.

பொதுக் கல்வியே அரசாங்கத்தின் முதல் இலட்சியமாயிருக்கவேண்டும்.

-நெப்போலியன்.

கல்விப் பழமொழிகள்

கல்வியே மனிதனை உருவாக்குகின்றது.

வயது வந்தவர்களுக்குச் சிறைச்சாலைகள் கட்டுவதைப் பார்க்கினும், குழந்தைகளுக்குப் பள்ளிகள் அமைப்பது நலம்.

தன் மகனைப் பயனற்றவனாகச் செய்பவன், ஒரு திருடனை வளர்க்கிறான்.

-இங்கிலாந்து.

அதிக படிப்பும், மிகக்குறைந்த படிப்பும் மனவளர்ச்சிக்கு இடையூறுகள்.

-பிரான்ஸ்.

கல்வி செல்வத்திற்கு அணிகலன், வறுமைக்கு அடைக்கலம்.

கற்றவர்களே சுதந்திர முடையவர்கள்.

கல்வியின் வேர்கள் கசப்பானவை, கனி இனியது.

-கிரீஸ்.

மாணவனை மதிப்பதே கல்வியின் இரகசியம்.

பொதுமக்களின் கல்வி அரசாங்கத்தின் முதற் கடமையாயிருக்க வேண்டும்.