பக்கம்:கல்வியும் அரசாங்கமும், அண்ணாதுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கொஞ்சம் சுட்டுப் பார்த்தோம்’ என்று இறுமாப்புடன் விடையளிப்பார் அமைச்சர். சர்க்காரைப் பாராட்டுகிறநிலை நாளுக்கு நாள் குறைந்து வருவதை மக்கள் மன்றத்திலே காண்கிறேன் காருண்யமுள்ள காங்கிரஸ் சர்க்கார் என்பதுபோய் காருண்யமில்லாத காங்கிரஸ் சர்க்கார் என்று எங்கும் பேசுவதைக் காணலாம்
எங்கள் நாட்டிலே 100க்கு 13 அல்லது 16 பேர்தான் படித்து இருக்கிறார்கள். எங்கள் நாட்டிலே அநேகருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எங்கள் சர்க்கார் தேசியத்தின பெயரால் வளர்ந்த சர்க்கார். தேசீயத்தால் கட்டப்பட்ட சர்க்கார். இந்த சர்க்காராவது கல்வி நிலையங்களை ஏற்று நடத்துவதாவது! நடத்தவே நடத்தாது.
இப் பாராளுமன்றத்திலே கடைசிவரை “கல்வி நிலையங்களை அரசாங்கம் ஏற்று நடத்தலாமா?” என்ற பிரச்னையை ஓட்டுக்கு விடாமலே சாமர்த்தியமாக நடந்து கொண்டார்கள். இது உங்கள் அனைவருக்கும் விந்தை யாகத்தானிருக்கும் ஓட்டுக்கு வீடும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தவில்லை. ஓட்டுக்கு விட்டிருந்தால் சர்க்காரின் மந்திரிசபை ஆட்டம் கொடுக்கிறதா? இல்லையா? என்பது தெரியும். உங்கள் மந்திரிசபை ஆட்டம் கொடுத்திருக்கிறதோ இல்லையோ? அது எனக்குத் தெரியாது. எங்கள் நாட்டிலே உள்ள மந்திரிசபை ஆட்டம் கொடுத்து விட்டது.
இங்கே இரண்டு மூன்று எதிர்கட்சியை வைத்திருக்கிறீர்கள். சுயேச்சைக் கட்சியென்றும், இயற்கைக்கட்சி என்றும் வைத்திருக்கிறீர்கள். எங்கள் பாராளுமன்றத்திலே எதிர்க்கட்சியில்லை. தனிப்பட்டவர்கள் தான் எதிர்க்கிறர்கள். சர்க்காரை எதிர்க்க பல கட்சிகள் இருக்கின்றன. எல்லோரும் ஒன்று சேர்ந்து சர்க்காரை எதிர்க்க ரொம்ப அவகாசம் பிடிக்கும். இங்கு கேள்வி நேரத்தின்