பக்கம்:கல்வியும் அரசாங்கமும், அண்ணாதுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

மாக வந்து மன்றத் தலைவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வார்கள்,

குழந்தை இல்லாதவர்கள் பணத்தைச் சேகரித்து வைப்பதற்காக வார்சு தேடவேண்டியதில்லை. அந்த சொத்துக்கு சர்க்காரே வார்சாக இருக்க வேண்டும். இப்பொழுது குழந்தை இல்லாதவர்க்கு வார்சு தேடிவைக்கும் பணமெல்லாம் கோயில் குளம் கட்டத்தான் பயன்படுகிறது நம் நாட்டிலே பிள்ளை இல்லாதவர்களுக்குச் சொத்து அதிகம். நான் சொல்லியமுறை நாட்டிலே சிறக்கவேண்டும் தனிப்பட்டவர்களிடம் சொத்தை விட்டுவைக்கக் கூடாது. தனிப்பட்டவர்களிடம் சொத்தில்லாமல் சர்க்காரிடம் சொத்து இருந்தால் அதை நல்லதொரு கலாசாலை அமைக்கவும், நல்ல விஞ்ஞான முறையை ஏற்படுத்தவும் பயன்படுத்தலாம்.

இப்பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப்பட்ட பொழுது மந்திரிகள் எல்லோரும் பொறுப்புடன் பதில் சொல்லியதைப் பாராட்டுகிறேன். எங்கள் நாட்டிலே மந்திரிகளை உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் இவ்வளவு பொறுப்புடன் பதில் சொல்லமாட்டார்கள். சேலத்திலே கம்யூனிஸ்ட்களை சுட்டு வீழ்த்தியதைப்பற்றி சரமாறியாகக் கேள்விகள் இங்கு கேட்கப்பட்டது. சிறை என்றால் என்ன? என்ற கேள்வியை அன்பர் ஒருவர் கேட்டார்.

எங்கள் நாட்டிலே இதுபோன்ற கேள்விகள் கேட்கப்பட்டால் மந்திரிகள் கூறும் பதில் என்னவாக இருக்கும்? சிறையிலேதிகளைத் துன்புறுத்தலாமா? என்று கேட்டால் அதற்கு மந்திரியார் கூறும் பதில் இது தான். 'சிறையிலே துப்பாக்கியைக் கொண்டுதானே சுட்டோம். பின்னர் துப்பாக்கிக்குத்தான் வேறு என்ன வேலை? துப்பாக்கி சும்மாயிருந்தால் துருப்பிடித்து விடாதா? ஆகவே