பக்கம்:கல்வியும் அரசாங்கமும், அண்ணாதுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கேட்டால் பணம் தரமாட்டார்கள். எங்கள் நாட்டிலே அமைச்சர்கள் கோயிலுக்காக பணம் கேட்க ஓடுவார்கள்.
பச்சையப்பன் கல்லூரியை நிறுவியவர் ஒரு தனவந்தர். அவருடைய காலத்திற்குப் பின்னும் அறிவு ஒளியால் மக்கள் பெரும்பயன் அடைவதைக் காண்கிறோம். ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்கள் பலர் இக்கல்லூரியிலே கல்வி பயில்கிறார்கள் எங்கள் நாட்டிலே மக்கள் மதப்பிடியில் குருட்டு நம்பிக்கை வைத்திருப்பதோடு ஏதோ ஒரு மேலுலகத்திலே நல்ல இடம் இருப்பதாகவும் எண்ணுகிறார்கள்.

“இம்மைச்செய்தது மறுமைக்கு ஆமெனும்
அறவிலை வணிகன் ஆயலின்" --(புறம்)

எங்கள் நாட்டிலே தற்போது வஞ்சக வாணிபர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் கெண்டையைப் போட்டு விராலை இழுப்பவர்கள். நம் தமிழ் நாட்டிலிருந்த கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய ஆய் இப்பிறவியிலே செய்த அறம் அடுத்த பிறவியிலே ஆக்கம் தரும் என்ற பயனைக் கருதாது செய்தான். ஆனால் எங்கள் நாட்டு சர்க்காரும் வஞ்ச வாணிபத்தை நடத்து கிறதே! வள்ளல் ஆய் வழிவந்தவர்களாகிய நாங்கள் பரம்பரை பாத்யதைக்கொண்டு அறவினை வாணிபத்திலே அறிவுப் பிரசாரத்திலே ஈடுபட்டிருக்கிறோம்.

எங்கள் நாட்டிலே நடக்கும் பாராளு மன்றத்தைப் பார்த்துவிட்டு வந்த அன்பர்கள் பலர் இந்த பாராளுமன்றம் கடைவீதியிலே நடக்கிறதா? என்று கேட்கிறார்கள், அமைச்சர்கள் வந்தால் உறுப்பினர்கள் வரமாட்டார்கள் உறுப்பினர்கள் வந்தால் அமைச்சர்கள் வரமாட்டார்கள். மந்திரிகளில் பெரும்பாலோர் காலதாமத