பக்கம்:கல்வியும் அரசாங்கமும், அண்ணாதுரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

ஆதரவின்றி தனிப்பட்டவரின் அறத்தினால் கட்டப்பட்ட பச்சையப்பன் கல்லூரியில் படித்தவன் நான் முற்போக்குச் சக்திக்காக நன்கு பயிற்சி செய்விக்கப்பட்ட மாணவ மணிகளையே அங்கு காணலாம். சர்க்கார் கல்லூரிகளிலே இருக்கின்ற ஜொலிப்பு பச்சையப்பன் கல்லூரியிலே இல்லாமல் இருக்கலாம் ஆனால் அங்கே திறமையுள்ள மாணவர்கள் பலர் இருப்பதை நீங்கள் காணலாம். பச்சையப்பன் கல்லூரியிலே பயிலும் மாணவ மணிகளின் அறையிலே மலரும் மலர் பெரும் புரட்சியாக மாறும்

எங்கள் நாட்டிலே அரசாங்கத்தார் கல்வி நிலையங்களை ஏற்று நடத்துவதற்குப் போதுமான பணம் இல்லை. எங்கள் நாட்டிற்கேற்ற கல்வியும் இல்லை ! எங்கள் நாட்டிலே பணம் படைத்த சீமான்களும் சீமாட்டிகளும் தங்கள் உள்ளத்திலே தர்மத்தைப்பற்றி நினைக்கிற அளவுக்கு கல்வி நிலையைப்பற்றி நினைப்பதில்லை,

எங்கள் நாட்டு மக்களின் மனத்தை மாற்றி அமைக்க நாங்கள் அரும்பாடுபடுகிறோம். அதற்காகவே திராவிட முன்னேற்றக் கட்சியையும் துவக்கியுள்ளோம்.

கல்வி நிலையங்களை ஏற்று நடத்த பொதுமக்களை பணம் கேட்டால் அவர்கள் தருவதற்குத் தயங்குகிறார்கள். இதற்குத் தலையாய காரணம் என்ன தெரியுமா?

கல்வி நிலையங்களுக்காக செலவிடுகிற பணத்தை கோயிலுக்குச் செலவு செய்தால் போகிற கதிக்கு நல்லது வரும் என்று நம்புகிறார்கள். தனவந்தர்கள், சிவபெருமான கோயில் கட்டவும், அக்கோயிலின் நடுவிலே பளிங்குமன்றம் ஒன்று கட்டவும், நீராழி மண்டபம் கட்டவும் ரூபாய் பத்தாயிரம் கேட்டாலும் தட்டாமல் தரராளமாகத் தருவார்கள். கல்வி நிலையங்களுக்காகக்