பக்கம்:கல்வியும் அரசாங்கமும், அண்ணாதுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


கல்வி எங்கள் நாட்டிலே ஜாதி முறையோடு பிணைக்கப் பட்டிருக்கிறது சில ஜாதிக்குத்தான் படிப்பு வரும் சில ஜாதிக்கு படிப்புவராது என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. சிலருக்குத்தான் படிப்பு வரும் சிலருக்கு படிப்பு வராது என்ற குருட்டு நம்பிக்கை இன்னும் இருக்கிறது. ஜாதி முதலைப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. சில ஜாதிக்கு எங்கள் நாட்டிலே பஜனை கூடங்கள் உண்டு. ஆனால் கல்வி நிலையங்கள் இல்லை.

பழம் பாடல் ஒன்று பிள்ளையாரிடம் சென்று பக்தியோடு வேண்டும் பாவனையில் அமைந்துள்ளது :-

“பாலும் தெளிதேனுப்பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா”

’பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் ஆகிய நான்கையும் உனக்குக் கலந்து தருகிறேன். ஏ துங்கக் கரிமுகத்துத் தூமணியே ! நீ எனக்கு முத்தமிழையும் தா’ என்று வேண்டுவதுண்டு. இந்தக் காலத்திலே இப்படியாரும் தருவதும் இல்லை. பிள்ளையார் அவர்களுக்குப் பாடம் வரும்படி செய்வதும் இல்லை.

நாட்டிலே நாங்கள் எவ்வளவோ சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பிவந்தாலும் நடமாடும் பிணங்கள் பல எங்கள் நாட்டிலே இருக்கத்தான் செய்கின்றன. நடமாடும் பிணங்கள் வதியும் நாட்டிலிருந்து நான் வருகிறேன்.

எங்கள் நாட்டிலே ஒரு கல்லூரி உண்டு. அந்தக் கல்லூரிக்குப் பெயர் பச்சையப்பன் கல்லூரி. சர்க்கார்