பக்கம்:கல்வி உளவியல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 97 அவற்றிற்கேற்றவாறு செயல்புரியும் ஆற்றலையும் குழந்தை அடை கின்றது. குறியீடுகளைப் பயன்படுத்தும் திறன் வளர்தல் : நாளாகநாளாக நிகழ்ச்சிகளின் பகுதிகளும் குறியீடுகளும் குழந்தையிடம் துலங்கல்களை எழுப்புகின்றன. பால் உ ரு ளி யி ல் , கரண்டியின் ஒலி கேட்டவுடன் குழந்தை உணவை எதிர்பார்க்கின்றது. முன்னல் இவ்வொலி பால்குடிக் கும்பொழுது எழுந்தது ; அங்கிகழ்ச்சியின் பகுதியாகிய ஒலியிலிருந்து முழு நிகழ்ச்சியின் பொருள் தோன்றுகின்றது. மொழிவளர்ச்சி துலங்கிய தும் குறியீடுகளைக் கையாளும் திறன் வளரத் தொடங்குகின்றது. பிற மாறுதல்கள் : முன்னைய அனுபவங்களைப் பயன்படுத்தும் திறனேயொட்டிப் பல திறன்கள் தோன்றுகின்றன. நாளடைவில் குழந்தை உடனே பயன்தரும் நோக்கங்களைத் தவிர்த்து நீண்ட பயன்தரும் விழுப் பொருள்களைக் குறிக்கோள்களாகக் கொள்ளுகிறது. காலப் போக்கில் சிறுவன் குறியீடுகளைத் தானகவே கையாளும் திறனைப்பெறுகின்றன். ஒரு சிற்றுாரின் வரைப்படத்தைப் பார்த்தோ, மாவட்டத்தின் வரைப் படத்தைப் பார்த்தோ அண்மையில் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுலா விற்குரிய திட்டத்தைப் போடுகின்ருன்; அதையே மனத்தாலும் இயற்றித் திட்டமிடுகின்றன். மன வளர்ச்சியில் மேற்கூறிய மாறுதல்கள் நிகழுங்கால், அங்கு தனித்தனி நிலைகள் இல்லை என்பது உணர்தற்பாலது. ஆயினும், சில வளர்ச்சிப் போக்குகள் ஒரு சமயம் தெளிவாகவும் பிறிதொரு சமயம் தெளிவற்றும் தோன்றுகின்றன. எனவே, மனத்தில் நிகழும் செயல்களை ஈண்டு ஓரளவு ஆராய்தல் இன்றியமையாத தாகின்றது. முதலாண்டில் புலன்கள் செயற்படுகின்றன ; அவற்றினைப் பயன் படுத்தும் திறன் மிகுதியாக வளர்கின்றது. இரண்டாம் யாண்டில் பேச்சு மேன்மையடைகின்றது. உறுமுதல், மழலைச்சொல், சொற்கள் என்ற வரிசையில் மொழிவளர்கின்றது. முதலிரண்டு யாண்டுகளில் குழந்தை புலன்களின் துணையால் சூழ்நிலையை நன்கு ஆராய்கின்றது. மூன்ரும் யாண்டில் யார்? எது? ஏன் ? என்று. பல விளுக்களைக் குழந்தை விடுக் கின்றது. இந்த யாண்டை'விளுகிலை எனலாம். இந் நிலையில் மொழி வளர்ச்சி சிறப்பெய்துகின்றது. குழந்தையின் காவில் முதன்முதல் சொல் எழுந்து ஒளிர்வது பத்தாம் திங்களிலாகும். 54-ஆம் வாரத்திற் குள் இரண்டு சொற்களும் 66ஆம் வாரத்திற்குள் 7 சொற்களும் விளங்குகின்றன. 86-ஆம் வாரத்திற்குமேல் இச் சொற்களின் க. உ.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/120&oldid=777743" இலிருந்து மீள்விக்கப்பட்டது