பக்கம்:கல்வி உளவியல்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கல்வி உளவியல் ஏலா. இதை அறியாமல் உடல், அறிவு, உள்ளக்கிளர்ச்சி, சமூக உணர்ச்சி போன்ற துறைகளில் குழந்தையால் இயலாததை இயலுமென்று எதிர்பார்ப்பதால், பள்ளியிலும் வீட்டிலும் அமைதிக்குறைவு நிலவுகின் றது என்பதை நினைவில் இருத்தவேண்டும். மேலே அறிந்தவற்றைத் தொகுத்துக் கூறுவோம். சூழ்நிலை-குடி வழித் தொடர்பு ஓர் இடைவினைத் தொடர்பு என்பதை அறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர். முதலாவதாக இரண்டன் கூறுகளும் ஒன்ருேடொன்று ஒட்டிப் பலன் தருவதில்லை. ஒன்றன்வன்மை பிறிதொன்றன் வன்மை யாலும் தன்மையாலும் பாதிக்கப்பெறும். இரண்டாவதாக, இத்தொடர்பு கணிதக் கூட்டலைப் போன்ற தன்று பெருக்கலைப் போன்றது. ஒருவரது தனிப் பண்புகள் குடிவழிக் கூறுகளையும் சூழ்நிலைக் கூறுகளையும் கூட்டிவருவதன்று ; அவற்றைப் பெருக்கி வருவது. எனவே, சூழ் நிலையில் தோன்றும் ஒரு சிறு வேற்றுமை குடிவழியுடன் காணப்பெறும் ஒரு சிறு வேற்றுமையுடன் சேர்ந்து பெருகி மிகவும் வேறுபாடுள்ள ஒரு பண்பினை விளைவிக்கும் என்பதாகின்றது. இத்தகைய வன்மைப் பெருக் கல்கள் ஒருவரது வளர்ச்சியில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. ஒவ் வொரு பெருக்குத் தொகையும் அடுத்த பெருக்கலுக்கு அடிப்படையா கின்றது. இவ்வாறு வேற்றுமை விரிந்துகொண்டே போகின்றது. இரு வருக்கிடையில் காணப்பெறும் சிறிய முதல்வேற்றுமை, அவர்கள் வளர்ச் சியில் ஒன்ருேடொன்று அகன்று செல்லும் இரண்டு பாதைகளில் கொண்டுசெலுத்தவும் கூடும். மூன்ருவதாக, குடிகிலே சூழ்நிலைகள் எளிய தனி வன்மைகள் அன்று. இவை பல தனிவன்மைகளின் கூட்டத்தால் பெற்ற மிகவும் சிக்கலான தொகுதிகள். வளர்ச்சியில் இவற்றுள் உள்ள தனிக் கூறுகளுக்கிடையே இடைவினை நடைபெறுவதோடன்றி இத் தனிக் கூறுகளும் ஒன்ருேடொன்று இடைவினை இயற்றுகின்றன. குடிவழி ஆயிரக்கணக்கான உயிரணுக்களாலாகியது. ஒவ்வோர் உயிரணுவும் கோடிக்கணக்கான வேதியல் அணுக்களாலானது. இவற்றின் கூட்டமே குடிவழி என்ற சொல்லால் குறிக்கப்பெறுவது. இது போலவே சூழ்நிலை என்பதும் குடிவழியுடன் ஒப்பிடவும் வேறுபடுத்தவும் கூடிய ஒரு பொருளன்று. அதில் உயிரணுவியல் சூழ்நிலை, உயிரணுக் கள்மேல் ஒளியால் விளையும் பலன்கள், பிறப்பு, சேதம், கல்வி வரலாறு, 85 Geistlus gigi - chemical atom. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/176&oldid=777870" இலிருந்து மீள்விக்கப்பட்டது