பக்கம்:கல்வி உளவியல்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கல்வி உளவியல் தள்ளுதல், தேர்வில் தோல்வியடையாதிருத்தல் போன்ற எண்ணங்களை உண்டாக்குதல். ' எதிரதாக் காக்கும் அறிவு” அச்சத்தைப் பற்றுக் கோடாகக்கொண்டே எழுவது. தெளுலிராமனின் சூடுண்டபூனை பாலைக் கண்டு அஞ்சுவது போல, பலர் சொல்லியும் கேளாத ஒருவன் ஒருதடவை துன்பத்தில் உழன்று தப்பிப் பிழைத்தால், அதனல் வரும் அச்சம் அவனுக்கு என்றும் வழிகாட்டியாக அமையும். குழவிகள் அச்சத்தின் கட்டுப்பாடின்றி தம் திறமைக்கு மிஞ்சிய செயல்களை மேற்கொண்டு இடரெய்துவதைக் காண்கின்ருேம். வள்ளுவப் பெருந்தகையும், அஞ்சுவது அஞ்சாமை பேதமை ; அஞ்சுவ(து) அஞ்சல் அறிவார் தொழில்’’ (அஞ்சுதல் - எண்ணித்தவிர்தல் : அஞ்சாமை - எண்ணுது செய்து நிற்றல்), என்று கூறியிருத்தலை எண்ணி ஒர்க. அச்சத்தால் பல நற்பயன்கள் ஏற்படினும், சில தீப்பயன்களும் உண் டாகின்றன. சிலர் அச்சத்தால் சொல்லொணுத் துன்பம் அடைகின்ற னர். சிலர் இல்லாதனவற்றை யெல்லாம் கருதி அஞ்சி அஞ்சிச் சாகின் றனர். அச்சத்தின் மிகுதியால், சிலசமயம் ஒடித் தப்பவேண்டியபொழு தும், ஓடுவதற்கும் வலியற்றுத் தவிப்பர். அச்சத்தைத் தடுத்தலும் சமாளித்தலும் : உலகில் அச்சத்திற்கு ஓர் இடம் உண்டெனினும், வீண் அச்சங்கள் எழுப்புதல் கூடாது. அவற் றைப் பேய் ஒட்டுவது போல் ஒட்டி ஒழித்தல் வேண்டும். நேரே அச்சம் வேண்டாம் என எரிந்து விழுந்து தடுப்பது அச்சத்தை மேலும் வளர்க்கும் வழியாகும். குழவியின் அச்சத்தை ஊன்றி உற்று நோக்கி ஆராய்தல் வேண்டும். மேலே நாம் அச்சம் தோன்றும் வகைகளாகக் கூறியவற்றில், குறிப்பிட்ட தொரு குழவியிடத்தே, எந்த வகையால், அச்சம் தோன்று கிறது என உணர்தல் வேண்டும். அந்த கிலைக் கேற்ப மாற்று நிலை ஒன்று அமைத்தல் வேண்டும். அச்சப் பேயினை ஒட்ட அறிஞர்கள் பல வழிகளை வகுத்துள்ளனர். கொடிய விலங்குகளைக் கூண்டில் அடைத்தலும் கட்டிவைத்தலும் வேண்டும். அந்த நிலையில் வைத்துப் பழகி வந்தால் அச்சம் நீங்கும். தீங்கு பயக்காத முயல் முதலிய விலங்குகளைப்பற்றி எழுகின்ற அச்சத்தைச் செயற்கை மறிவினையை 40 எழுப்பும் வகையா லேயே மாற்றுதல் வேண்டும். நாயைக் கண்டும் பிச்சைக்காரனைக் கண்டும் வெருண்டோடும் குழந்தையை, அவர்கட்குக் குழந்தையைக் 89. குறள் - 428, *o locaär-reflex action.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/198&oldid=777920" இலிருந்து மீள்விக்கப்பட்டது