பக்கம்:கல்வி உளவியல்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 கல்வி உளவியல் விளையாட்டு, வாழ்க்கை என்ற மூன்றும் தொடர்புறுகின்றன. இவை மூன்றும் இவற்றின் ஒன்றிலே விளங்க, இவை மூன்றிலும் இவை ஒவ் வொன்றும் விளங்க, ஒன்றில் முன் ருய், மூன்றில் ஒன்ருய்ப் பொறுமை அறம் பிறங்கப் பொலிகின்றது. இம்முறை. மொழிப் பாடத்தில் இம் முறையை எங்ங்ணம் கையாளலாம் என்பதை முறை நூல்களில் கண்டு தெளிக, * விளையாட்டைப்பற்றிய சில கொள்கைகள் : விளை யா ட் ைட ப் பற்றி உளவியலாரிடையே பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அவை யாவும் கொள்கை வடிவம் பெற்று விளையாட்டின் உண்மையை விளக்க முயலுகின்றன. என்ருலும், அவை ஒவ்வொன்றும் விளையாட் டுக்களின் ஏதேனும் ஒரு கூறினேயே வற்புறுத்துகின்றது. விஞ்சு ஆற்றல் கொள்கை8ே : குழந்தைகளிடமும் பி ர | ணி களின் குட்டிகளிடமும் தற்காப்புக்கும் வளர்ச்சிக்கும் தேவையானதை விட அதிகமான ஆற்றல் இருக்கின்றதென்றும், தேவைக்குரிய ஆற்றல் போக எஞ்சிய ஆற்றலே விளையாட்டின்மூலம் வெளிப்படுகிறது என்றும் இக் கொள்கை கூறுகின்றது. வயிறு கிறைய உண்ட சிங்கங்கள் கர்ச்சனை செய்கின்றன ; உண்டு வயிறு கிறைந்த பறவைகள் பாடுகின்றன. அவ் வாறே குழந்தைகளும் தம்மிடமுள்ள மீறிய ஆற்றலால் களித்து விளை யாடுகின்றனர். நீராவிப் பொறி தேவைக்கு அதிகமாய்ச் சேர்ந்திருக்கும் நீராவியை வெளிப்படுத்துவதுபோல, பிராணிகளும் தம்முடைய மிகுதி ஆற்றலை விளையாட்டின்மூலம் வெளிப்படுத்துகின்றன. கிழவர்கள், நோயாளிகள், பெண்கள் ஆகியோரும் விளையாட்டை விரும்புவதற்கும், குழந்தைகளும் பல்வேறு நிலைகளில் பல்வேறு விதமான உற்சாகம் காட்டு வதற்கும், பகல் முழுதும் தொழிலில் ஈடுபட்டு வீடுவந்ததும் பாய் விரிப்ப தற்குக்கூட ஆற்றலின் றிக் களத்திருக்கும் வணிகர் டென்னிஸ் விளை யாடுவதற்கும் சீட்டு விளையாடுவதற்கும் இக்கொள்கையால் விளக்கம்தர முடியவில்லை. வாழ்க்கை ஆயத்தக் கொள்கை99 : பி. ற் க | ல வாழ்க்கைத் தேவைகளுக்கு வேண்டிய வேலைகளை முன்பே எதிர்பார்த்துக் குழந்தை களும் பிராணிகளின் குட்டிகளும் தங்கள் விளையாட்டில் பழகுகின்றனர் என்பது இக் கொள்கை. பூனைக்குட்டி அசையும் பொருள்களைக் கண்டு விரட்டுதலும், நாய்க்குட்டிகள் சண்டையிட்டுக் கொள்ளுதலும், சிறுவன் T . சுப்புசெட்டியார் : தமிழ் பயிற்றும் முறை, பக்கம் 08:15, es coleó a 43 bpso Ga; m. siro, - Surplus energy theory. e a sung &ars &lujäsö, Glasreissos - preparation for life theory.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/214&oldid=777956" இலிருந்து மீள்விக்கப்பட்டது