பக்கம்:கல்வி உளவியல்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 கல்வி உளவியல் இயக்கமே நடத்தியுள்ளார். அதைப்பற்றி அவர் பல நூல்களையும் எழுதி யுள்ளார். ஆளுமை ஒருமைப்பாடு : ஆளுமை வளர்ச்சி வெற்று கிலேயில் தோன் ருது ; தகுந்த சூழ்நிலையில் நடைபெறும் இடைவினையின் மூலமாகவே அது வளரும். இச் சூழ்நிலையில் வேலை முக்கிய இடம் பெறுகின்றது. ட்யூவியின் கருத்துப்படி தொழில் என்னும் சொல்லில் உடலுழைப்பும் ஊதியத் தேட்டமும் மட்டுமின்றி, கலைத் திறன், அறிவியல் திறன், பயனுடைக் குடிமை, உயர் தொழில், வணிகத் தொழில் முதலியவையும் அடங்கும். ட்யூவியின் கருத்துப்படி ஒரு சமூகத்தில் மனத்தோடு தொடர் புடைய தனிச் செயல்கள் தொழில்களே, அவை அடிப்படைச் செயல் வழக்காறுகளே அமைத்து அவற்றின் மூலம் நமது பழக்கங்களைக் கட்டுப் படுத்தி வளர்க்கின்றன. இப் பழக்கங்கள் வெளிப்படையான நடை முறைச் செயல்கள் மட்டிலுமன்று ; அவை வாழ்க்கை மன நிறைவையும் அளிப்பவை. வெற்றிக்கும் தோல்விக்கும் கிலேயாக அமைபவையும் அவைகளே. ஆகையால், அவை உயர் மதிப்புக்களை வகுப்பதற்கும் வரையறுப்பதற்கும் அன்ருட முயற்சியில் துணை செய்கின்றன. தொழில் கள் வேட்கைகளைக் கட்டுப்படுத்துகின்றன; முக்கியமான பொருள்களையும், கவர்ச்சிகரமான பண்புகளையும் எடுத்துக் காட்டுகின்றன. இங்ஙனம் மன வாழ்க்கையின் உள்ளக்கிளர்ச்சிக் கூறும் அறிவுக்கூறும் நெறிப் படுத்தப்பெறுகின்றன. வேலை மூலம் கற்பதால் மாளுக்கன் ஆக்கத் தொழில்களில் பங் கெடுத்து அவற்றைப்பற்றி ஆராய்கின்றன். அடியிற்கண்டவாறு அவனிடம் திறமைகள், சமூகத் தொடர்பு, ஆளுமை ஒருமைப்பாடு வளர்வதற்குரிய பிற அனுபவங்களும் அமையும். (1) பள்ளியில் சொந்த நலனுக்குப் பதிலாகச் சமூக நெறிப்பாட்டை கிலைக்களமாகக் கொண்டால், வேலை ஒரு சமூகத் தொண்டு என்னும் மனப்பான்மையும், உடல் உழைப்பையும் வேலையையும் பற்றிய மதிப்பும் உண்டாகும், - (2) வேலை மூலம் கல்வி என்னும் திட்டப்படி உண்மையுலகச் சமூக அனுபவம் அளிக்கும் சூழ்நிலை கிடைக்கின்றது. வாழ்க்கையின் உண்மை கிலைகளைச் சமாளிப்பதால், அறிதிறன் வளர்ச்சிக்கும் ஆளுமைத்துலக்கத் திற்கும் அடிப்படை அமைகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/238&oldid=778012" இலிருந்து மீள்விக்கப்பட்டது