பக்கம்:கல்வி உளவியல்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 கல்வி உளவியல் பயன்படுத்துவது என்பதில் விடுப்பூக்க அக்கறையும் இருப்பதைக் காண லாம். எனவே (2) குழந்தையிடம் இயல்பாக அமைந்திருக்கும் உளப்போக்குகளே உறைப்பாக' அமைந்திருக்கும் அக்கறைக்கு முதல் மூலங்களாகும் ; இவையே தொடக்க ஆண்டுகளில் குழந்தை யின் கற்றலுக்குத் துணைசெய்கின்றன. நாளடைவில் குழந்தையிடம் பயின்ற கவர்ச்சிகளும்** தோன்று கின்றன. இளங்குழவிகள் இயங்கும் பொருள்களின் மீது அக்கறை கொள்ளுகின்றன ; பெரும்பாலும் இது விடுப்பூக்கத்தின் விளைவாக இருக்கலாம். அவற்றைத் தாமே இயக்கவல்லவர்களாக இருந்தால், அந்த அக்கறை இன்னும் அதிகமாகின்றது. காரணம், அது அவர்களின் முதன்மையூக்கத் துடிப்பை அதாவது அதிகாரத்தின் மீதுள்ள விழைவைத் திருப்தி செய்கின்றது. இவ்வாறு அவர்கள் குழலிலிருந்து நீர் வீழ்வதிலும் ஒரு கலத்திலிருந்து பிறிதொரு கலத்திற்கு நீர்வார்ப்பதிலும் அக்கறை காட்டுகின்றனர். ஒரு நாள் ஓர் ஊற்றுப்பேனவுக்கு மை நிரப்புவதை யும் அப்பொழுது முள் தலைகீழாக இருப்பதையும் ஒரு குழந்தை காண் கின்றது. அதனுடைய முன்னனுபவத்தால் மை கீழே வழியும் என எதிர் பார்க்கும்படி தூண்டப்பெறுகின்றது. உடனே ஊற்றுப் பேளு குழந்தை விழையும் பொருளாகின்றது. எனவே (3) குழந்தைகள் கற்கும் நிலையில் அவற்றிடம் இயல்பாக அமைந்துள்ள ஆதி இயல்பூக்கக் கவர்ச்சிகள் புதிதான பயின்ற கவர்ச்சிகளால் வலுப்பெறுகின்றன. குழந்தையின் மன வாழ்க்கை மிகவும் சிக்கலானது. அதனிடம் ஒரு திட்டமான அக்கறை இருக்கின்றது என்று சொல்வதற்கில்லை. பயம், விருப்பு, இறுமாப்பு, கீழ்ப்படிதல் போன்ற முரண்பட்ட உள்ளக் கிளர்ச்சி களின் மோதல்கள் புதிதாக உண்டாகும் கவர்ச்சிகளால் மேலும் சிக்கலா கின்றன. சிறப்பாகத் தன் விருப்பு வெறுப்புக்களாலும், பிறர் தலையீட் டாலும், தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கேற்றவாறு பொருத்தப்பாட் டையும் திறன் இல்லாமையால் நேரிடும் மனமுறிவிஞலும். இச்சிக்கல் கிகழ்கின்றது. தவிர, சில இயல்பூக்கங்கள் நாகரிக வாழ்விற்குப் பொருந்துவதில்லை. சில வன்மையான கவர்ச்சிகளுக்கு இடம் இல்லை என்பதையும் குழவிகள் அறிகின்றன. எனவே, பல இயல்பான கவர்ச்சி கள் இடமின்றி மறைகின்றன. உளவியலார் இக்கவர்ச்சிகள் நசுக்கப் பெறுகின்றன என்று கூறுவர். நசுக்கப்பெற்ற கவர்ச்சிகள் மறைந்தன ior sopäurs - intense. **uussirp 5suffé flásár - acquired interests. **losopsi\sq - frustration.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/244&oldid=778024" இலிருந்து மீள்விக்கப்பட்டது