பக்கம்:கல்வி உளவியல்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 229 கின்றன. இங்ங்ணமே சிலவகை ஒலிகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. சில வகை மணங்கள், வலி போன்றவையும் சிறந்த தூண்டல்களாக அமைதல் கூடும். காரணம், அவை உயிரிக்கு மிகவும் முக்கியமானவை. கீழ்நிலைப் பிராணிகளிடையே நேரிடும் துலங்கலிலிருந்து தூண்டல்களின் தேர்தலில் உயரியல் அடிப்படையைக் காணலாம். தேனீக்கள், வண்ணுத்திப் பூச்சிகள், வேறு பூச்சியினங்கள் ஒரு பொருளின் ஏதாவது ஒரு தலைசிறந்த பண்பிளுலேயே உணவைக் கண்டறிகின்றன; அல்லது இணை விழைச்சு (கலவி) புரிகின்றன. (2) தூண்டலின்' உறைப்பு : உரத்த ஒலி, பேரொளி, பலமான தாக்குதல், பொறுக்க முடியாத பல்வலி, கவனத்தை வலிதிற் பெறுகின்றன. திடீரென்று தோன்றும் பேரொளி, பேரொலி ஆகிய வையே மிக்க கவனம் பெறுகின்றன. இப் பெருந்துண்டல்களும் நீண்ட நேரம் தொடர்ந்து நீடித்தால் வலியிழக்கின்றன. தகரத் தொழிற்சாலை யருகிலும் கடற்கரையருகிலும் வாழ்வோர் அவ்விரைச்சலால் பாதிக்கப் பெறுவதில்லை. ஆனல், திடீரென்று துண்டலின் அளவு குறைதலும் கவனத்திற்கு ஏதுவாகும். ஒரு பெரிய பொறி வேலை செய்து திடீரென்று கின்ருல், அவ்வமைதி நம் கவனத்தை இழுக்கின்றது. அங்ங்னமே, கம் அறையில் இயங்கிக்கொண்டிருக்கும் கடிகாரத்தின் டிக் ஒலியை நாம் சாதாரணமாகக் கவனிப்பதில்லை. கடிகாரம் திடீரென்று கின்றுவிட்டால் உடனே அதைக் கவனிக்கின்ருேம். ஆகவே, அமைதியும் கவனம் பெறு வதற்குரிய தூண்டலே. ஆயினும், இரைச்சல் அமைதியைவிட வலிமை வாய்ந்தது. ஒரு மென்சொல்லுக்கு மறுமொழி இல்லையாயின், உரக்கக் கத்தினல் உடனே பதில் வருகின்றது. (3) தூண்டலின் அளவு : பெரிய பொருள்கள் சிறிய பொருள் களைவிட நம் கவனத்தை ஈர்க்கின்றன. பெரிய பொருள்கள் அதிகமான புகுவாய்களைக் கிளர்ந்தெழச் செய்து, விடிையொன்றுக்கு அதிக மான கிளர்ச்சிகளை மூளைக்கு அனுப்புகின்றன. இதல்ைதான் விளம்பரம் செய்வோர் பெரிய எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். கடைகள், கிலையங்கள், பள்ளிகளின் பெயர்கள் முதலியவை பெரிய எழுத்துக்களால் எழுதப்பெறுகின்றன. (4) துண்டல் காலமும் மீட்டுமீட்டுத் தோன்றுதலும் : முதலில் ஒரு தூண்டல் கவனம் பெருவிட்டால் அத்தூண்டல் தொடர்ந்து நிகழுங்கால் வெற்றி ஏற்படலாம். கவனம் சதா நிலமாறிக் zostol-5-stimulus. 292-späu-intensity. 31 HCŞsuffin - receptor.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/251&oldid=778040" இலிருந்து மீள்விக்கப்பட்டது