பக்கம்:கல்வி உளவியல்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூ றுகள் 233 இவனுக்குப் பறவையின் இன்குரல் கேட்பதில்லை. எதிர்பார்த்தலாவது எதிர்பார்க்கப்பெறும் அனுபவத்தைச் செய்து பார்ப்பது போலாகும். அவ் வனுபவம் தோன்றுங்கால் அத்தோற்றம் நாம் முன்னே பழகிய கண்பனைச் சந்தித்தது போலாகும். (5) கவர்ச்சிகள்: இவைபற்றி மேலே கூறியுள்ளோம். மேலும் ஒரு சில எடுத்துக்காட்டுக்களை ஈண்டு கூறுவோம். நம்முடைய கவர்ச்சி களுக்கு ஏற்ற பொருள்களை நாம் ஊன்றிக் கவனிக்கின்ருேம். அலுவல் நாடிக்கொண்டிருப்பவர் செய்தித்தாளில் தேவை” என்று குறிப் பிட்டுள்ள மிகச் சிறிய விளம்பரத்தையும் விரைவில் கண்டு கொள்ளு கின்ருர், ஆசிரியர்களுக்கு : கவனத்தைப்பற்றி மேற்கூறியவற்றிலிருந்து ஆசிரியர்கள் குழந்தைகளின் கவனத்தைப் பெறச் சிலயுக்தி முறைகளை" அறிந்து கொள்ளலாம். பல வண்ண சீமைச்சுண்ணும்புக் கட்டியால் எழுதுதல், சொற்களின்கீழ்க் கோடிடல், சில சொற்களைச் சாய்த்து அல்லது தடித்து எழுதுதல், சைகைகளையும் குரலையும் சமயத்துக்குத் தகுந்தவாறு மாற்றுதல் போன்ற முறைகளை ஆசிரியர்கள் கையாள வேண்டும். குழந்தைகளின் கவர்ச்சிகளுக்கு முறையீடு செய்தல் வேண்டும். முதலில் குழந்தைகட்குக் கவர்ச்சியில்லாதவற்றில் கூட கவர்ச்சி தரும்படி அவற்றை இயல்பூக்கங்களுடன் இணைக்க வேண்டும். குழந்தைகட்கு அலுப்பும் களைப்பும் ஏற்படாதவாறு பள்ளிவேல்கன் அமைக்க வேண்டும். குழந்தைகள் பலவற்றைத் தாங்களே செய்ய விரும்புவர்; அதற்குத் தக்க வாய்ப்புக்கள் தருதல் வேண்டும். கவனத்தின் வகைகள்: சாதாரணமாகக் கவனத்தை அறுதியிடும் கூறுகளை அடிப்படையாகக்கொண்டு அதனை மூவகையாகப் பிரித்துப் பேசுவர் உளவியலார். அவை அனிச்சைக் கவனம், இச்சைக் கவனம், பழக்கக் கவனம், என்பவை. கவனத்தின் வளர்ச்சி இந்த மூன்று படிகளில் முறையே நடைபெறுவதாகக் கொள்ளலாம். இளங்குழவியின் கவனம் முதல் வகையிலும், சமூக முதிர்ச்சி யடைந்த குமரனின் கவனம் இரண்டாம் வகையிலும், கற்றறிந்த நிபுணரின் கவனம் மூன்ரும் வகையிலும் அடங்கும் என்று கில்போர்டு' என்ற உளவியலறிஞர் கூறுவர். 261;&# gpopasir - techniques. ------- 27 அனிச்சை . involuntary 28% of - Voluntary: 2 ougšs - habitual or non-volun tai y soëléoGurio G - Guilford,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/255&oldid=778048" இலிருந்து மீள்விக்கப்பட்டது