பக்கம்:கல்வி உளவியல்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 241 புலன் உணர்ச்சிகளுக்குச் சரியான விளக்கம் வேண்டுமாகுல், அஃதாவது புலன்காட்சிகள் சரியான முறையில் வளரவேண்டுமாயின், குழந்தையின் அனுபவம் பெருகவேண்டும். ஆகவே, தொடக்ககிலைப் பள்ளியில் ஆசிரியரின் கோக்கமெல்லாம் இயன்றவரைக் குழந்தையின் அனுபவத்தைப் பெருக்குவதாக இருத்தல் வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குக் குழந்தைககுப் புதிய கிகழ்ச்சிகளில் பங்கு பெறும் வாய்ப்புக்கள் தருதல் வேண்டும். உண்மையான நிகழ்ச்சிகளை அமைகக முடியாவிடின், அதன் அனுபவத்தைப் படங்களைக்கொண் டாவது பெருகச் செய்யலாம். - புலன் காட்சியே கற்றலுக்கு அடிப்படையாகும்; அறிவின் தொடக் கமுமாகும். அது வெளியுலகத்தைப்பற்றிய திட்டமான அனுபவம் பெறுவதற்கும் முதற்காரணமாகின்றது. கற்பனை மனத்தின் வியத்தகு ஆற்றல்களுள் ஒன்று கற்பனை, சாதாரண மக்கள் இல்லாததைப் படைப்பதையும் வானக்கோட்டைகளை எழுப்பு வதையும் கற்பனை என்று கருதுகின்றனர். உண்மையில் கிலே பேறில்லாப் பொருள்களை உண்டாக்கும் மனத்தின் ஒருவகையாற்றல் கற்பனையாகும். ஆற்றங்கரையில் இயற்கைச் சூழலினிடையே தனிமையாக உட்கார்க் திருக்கும்பொழுது நம்முடைய மனம் தட்டுத்தடையின் றிப்பாவனை உலகங் களில் அலைகின்றது. வானத்திலுள்ள மேகங்களில் பிராணிகள், பறவை கள், கட்டடங்கள் ஆகியவற்றின் வடிவங்களைக் காண்கின்ருேம். சாதாரண நிகழ்ச்சி ஒரு சிறுகதை யாகின்றது. இவை யாவும் கற்பனையே. ஆனல், உளவியலில் கற்பனையை மிகவும் வரையறைப் படுத்திப் பேசவேண்டும். கற்பனை என்பது ஒருவகை அறிவுச்செயல், நம்முன் இல்லாத பொருள்களை மனத்தால் காண்பது கற்பன. புலன்களேத் துண்டும் பொருள்களைக் காண்பது புலன் காட்சி ; அப் பொருளின் தூண்டலின்றி அதே பொருளை அனுபவிப்பது சாயல்' அல்லது முதல்நிலைக்கற்பனை". சாயலின் அடிப்படையாகவே உயர்நிலைக் கற்பனை எழுகின்றது. புலன் உணர்ச்சி பொருள்விளக்கம் பெறுவதால் புலன்காட்சியாவதுபோல, சாயல் பொருள்பெற்றுக் கருத்தாக அமைகின்றது. எனவே, புலன் ... arus-image. “gosésaws sous-primary imagination. க.உ.16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/263&oldid=778066" இலிருந்து மீள்விக்கப்பட்டது