பக்கம்:கல்வி உளவியல்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 கல்வி உளவியல் பட்ட சொற்களைக் கற்பித்தால் அது கிளிப் பிள்ளையைப் பயிற்றுவது போலாகும். ஒரு குறிப்பிட்ட நிலையில் வளர்ச்சியும் தடைப்பட்டுப்போய் விடும். அனுபவத்தை யொட்டிய அறிவாக இருந்தால் மனம் எவ்வளவு வேண்டுமானலும் ஏற்றுக்கொள்ளும்; எனவே, மொழியும் அனுபவமும் ஒன்றை யொன்று வலுப்படுத்திச் செல்லும் முறையில் மொழி கற்பித்தல் கடைபெறல் வேண்டும். இவ்வாறு கற்பிக்கப்பெறும் புதிய சொற்களை யும் பிற குறியீடுகளையும் புதிய முறைகளில் சேர்த்துப் புதிய உணர்வுகளை உண்டாக்கும் ஆற்றலைப் பெறவும் முடியும். பழக்கங்கள் சிறுவர்களின் பிறவியிலேயே சில உளப்போக்குகள் அமைந்திருக் கின்றன; அவற்றை நாம் இயல்பூக்கங்கள் என்கின்ருேம். இந்த உளப் போக்குகளின் அடிப்படையில் நடைபெறும் புதிய நடத்தை கற்றதின் பய ல்ை ஏற்படுகிறது. ஒரு குழந்தை தாகை ஆடை அணிந்துகொள்ளவும் செவிலிப் பாடல்களைப் பாடவும், உணவுக்கு முன் கைகளைக் கழுவவும் கற்கின்றது. இவை பழக்கத்தால் ஏற்படுபவை. இச் செயல்களே, பழக்கங்கள் என வழங்குகின்றன. இயல்பூக்கச் செயல்கள் போலவே பழக்கச் செயல்களும் இயல்பாக நடைபெறுகின்றன. பழக்கம் இரண் டாவது இயற்கை என்பது ஒர் ஆங்கிலப் பழமொழி. பழக்கங்கள் பொறி இயக்கங்கள் போல் முதல் முயற்சியில் தோன்ருத விரைவையும் திட்டத் தையும் பெறுகின்றன. எனவே, பழக்கங்களே கற்றல் செயலின் முடிவு கிலே என்று கூறலாம். பழக்கம் (i) ஒரு செயல் திரும்பத் திரும்பச் செய்த லால் ஏற்படுகின்றது , (ii) பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அதை மீட்டும் செய்வதற்குக் கவனமும் முயற்சியும் தேவை இல்லை; (iii) ஒரே மாதிரி யான சந்தர்ப்பங்களில்தான் பழக்கச் செயல்கள் நடைபெறும். கடு நரம்பு மண்டலத்தில் நரம்பு ஆற்றல் ஒரு மையத்திலிருந்து பிறி தொரு மையத்திற்குப் பாயும்பொழுது அஃது ஒரு சுவட்டினை உண்டாக்கு கின்றது; அதன் வழியாக மீட்டும் ஆற்றல் பாய்வது எளிதாகின்றது. கூடல் வாய்களில் தடை குறைந்து ஆற்றல் எளிதாகச் செல்லுகின்றது. இஃது உடலியல் தரும் விளக்கம். உளவியல் முறையில் பழக்கங்கள் கற்கப்பெற்ற மன நிலைகள்' அல்லது வாசனைகள். இவை மனத்தின் இருத்தும் ஆற்றலைப் பொறுத்தவை. பழக்கங்கள் உடற்செயல்களே மட்டிலும் குறிக்கா; அவை சிந்தனையையும் குறிக்கும். சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் காப்பழக்கம் ” என்ற பழமொழியை எண்ணி Tx 30 ugăsă - habit.Ti saba fis- disposition.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/290&oldid=778127" இலிருந்து மீள்விக்கப்பட்டது