பக்கம்:கல்வி உளவியல்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் நலமும் உடல்நல வியலும் 307 தன் பள்ளிக்கும், தன் வீட்டிற்கும், தன் காட்டிற்கும் நற்பயன் விளையும் என்ற உண்மையைக் குழந்தை செவ்விதின் அறிய வாய்ப்புக் கிடைக் கின்றது. குழந்தை புலன்களின் மூலமே சூழ்நிலையிலிருந்து அறிவு பெற்று அச் சூழ்நிலைக்குத் தக்கவாறு பொருத்தப்பாடு அடைகின்றது என்பதை முன்னர்க் கூறிளுேம். அப் புலன்களில் யாதாவது குறைபாடுகளிருப் பினும், அன்றி அவை தக்க முறையில் செயற்படாவிடினும் முற்றிலும் சரியான பொருத்தப்பாடு அடைதல் முடியாது. கடுமையான குறை பாடுகள் இருப்பின், இடர்ப்பாடுகள் அதிகமாகிப் பிறருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்களே இல்லாது போய்விடும். இதல்ை ஆளுமை வளர்ச் சியும் தடைப்பட்டு விடும். எனவே, இப்புலன்களுக்கு நேரிடும் சில குறைபாடுகளையும், அவற்றின் அறிகுறிகளையும், அக் குறைபாடுகள் நேரிடும் காரணத்தையும், குறைபாடுகளைப் போக்கும் முறைகளையும் பற்றி ஆராய்தல் இன்றியமையாதது. கண்ணின் குறைபாடுகள் : காரணமும் அறிகுறிகளும் கண்விழி நீக்கத்தால் நாம் பார்வையை இழந்துவிடுவோம் என்பது காம் அறிந்ததே. வேறு காரணங்களும் உள. அவை: (1) கண்ணின் 'வில்லை வீங்குதல் அல்லது கண் திரவங்கள் இறுகுதல் ; (2) கட்புலப் படாம் அழிதல் ; (3) கண் திரையிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புப் பாதைகள் அழிதல் ; (4) மூளையின் பார்வை மையங்கள் அழிதல். இவ் வழிவுகளுக்குக் காரணங்கள் பல. புண்படுதல், விபத்துக்கள், நஞ்சு, நோய் ஆகியவை பொதுவாக நிகழும் காரணங்கள். இக்குறை தற் காலிகமானதாகவும் இருக்கலாம்; கிரந்தரமானதாகவும் அமையலாம். கிரந்தரமாக அமைந்துவிட்டால் பார்வையை மீண்டும் பெற முடியாது. ஏற்கெனவே இரண்டாம் அத்தியாயத்தில் கண்ணின் அமைப்பு, காட்சிப்புலன் செயற்படும் விதம் முதலிய செய்திகளை அறிந்தோம். அன்றியும், சாதாரணமாகக் கண்களில் ஏற்படக்கூடிய கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குறை காட்சி, இரட்டைப் பார்வை ஆகிய குறைகளையும், அவற்றின் காரணங்களையும், அவற்றைப் போக்கும் முறைகளையும் கண் டோம். ஈண்டு கண்ணின் குறைபாடுகளில் மேலும் சிலவற்றைக் காண் போம். 1. முதிர் காட்சிக் . இதனை ‘ வெள்ளெழுத்து என்றும் வழங்கு வர். இது தூரப்பார்வையின் ஒரு வகை. வயது முதிர்ந்தபின் கண்ணி gefarë n-old-sightedness.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/329&oldid=778214" இலிருந்து மீள்விக்கப்பட்டது