பக்கம்:கல்வி உளவியல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கல்வி உளவியல் செய்யலாம். உற்று நோக்கல் திறன்களும், படைப்புக் கற்பனையும் எங் கனம் வளர்கின்றன என்பதை விளக்குகின்றது; இத் திறன்வளர்ச்சியில் ஆசிரியர் துணை செய்வது அவருடைய பொறுப்பாகின்றது. எனவே, உளவியல் அறிவால் மாளுக்கர்களிடம் ஆசிரியரின் செல்வாக்கு அதிக மாகின்றது; பயிற்றும் பொருளையும் பயிற்றும் முறைகளையும் ஒரு கட்டுப் பாட்டிற்குள் கொண்டுசெலுத்த முடிகின்றது. கற்பிக்கும் கலையில் உளவியல் அடிப்படை அறிவியலாகச் செயற்படுகின்றது. மூன்ருவது : ஆசிரியர் தம்மைச் சரியாக உணர்வதற்கும் தம் பணி 'யின் பலனைச் சரியாக மதிப்பிடுவதற்கும் துணையாக இருத்தல். மானிடத் திறன்களின் வீச்சினை அறியும் அறிவினையும் தம்முடைய திறனைத் தம்முடன் பணியாற்றும் தோழ ஆசிரியர்களின் திறனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்குரிய ஆற்றலையும் ' உளவியல் தருகின்றது. அதல்ை தம் முடைய மதிப்பைச் சரியான முறையில் அளவிட்டுத் தம்முடன் பணி யாற்றுவோரிடம் அமைதியுடன் வாழத் துணை செய்கின்றது. தம்முடைய ஆற்றல்கள் யாவை என்பதை அறிந்துகொள்ளாமலேயே பல ஆசிரியர்கள் தொழிலில் நுழைகின்றனர். தம்முடைய வேலையைப்பற்றிப் பெரும் பாராட்டை எதிர்பார்த்து அது கிடைக்காவிடில், அவர்கள் சோர்வு அடைகின்றனர். ஒருவர் அமைதியான மனநிலை எய்த வேண்டுமானுல் அவர் தம்முடைய நற்கூறுகளையும், வலுவற்ற கூறுகளையும் அறிந்து அதற் கேற்றவாறு செயலாற்றுதலேயாகும். இத்தகைய அறிவு நற்கூறுகளைப் பெரும்பயன் அடைவதில் பயன்படுத்தலாம். குறைபாடுகள் நேரிடுவதைக் குறைத்துக் கொள்ளலாம். 'உன்னை அறிந்து கொள்' என்று மேலே குறிப்பிட்ட அருள்மொழியினே ஆசிரியரும் தம்மை அறிந்துகொள்வதில் மேற்கொள்ளவேண்டியது இன்றியமையாதது. உளவியல் அதற்குத் துணை கிற்கின்றது. உளவியல் ஆராய்ச்சி முறைகள் உளவியலில் சில ஆராய்ச்சி முறைகள் மேற்கொள்ளப் பெறுகின்றன. அவற்றைச் சிறிது அறிந்து கொள்வோம். உற்றுநோக்கல் முறை : எல்லா நூல்களும் கையாளும் முறை களில் முதலில் தோன்றுவது உற்றுநோக்கல் முறையாகும். இதில் இரண்டு வகை யுண்டு. ஒன்று, அகக்காட்சி*; மற்றென்று, புறக் காட்சி. 4a $pár-capacity. 4* sfá£-range. 4s &$pô-ability 44 u, $iqworth. 45 23;&milah—introspection:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/35&oldid=778258" இலிருந்து மீள்விக்கப்பட்டது