பக்கம்:கல்வி உளவியல்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 கல்வி உளவியல் வேண்டும். பள்ளியும் சிறுவனது ஆளுமை வளர்ச்சியில் ஈடுபட வேண் டியதே. வீட்டில் தக்க முறையில் பொருத்தப்பாடு உள்ளவர்களின் ஆளுமை மேன் மேலும் வளர்வதற்கும், சரியான பொருத்தப்பாடு பெருமல் ஆளுமை வளர்ச்சி சீர்கெட்டவர்களைத் திருத்துவதற்கும் பள்ளி தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, மாளுக்கர்களின் ஆளுமை வளர்ச்சியில் குடும்பம், சமூகம், பள்ளி ஆகிய மூன்றும் பங்கு பெறு கின்றன. குடும்ப நிலைகள் :-குடும்ப கிலைகள் குழந்தையின் பள்ளி வாழ்க் கையைப் பாதிக்கின்றன. குழந்தையின் பிறவிப் பண்புகளின் குறை பாடுகளைக் குடும்ப நிலைமைகள் நீக்கவும் கூடும்; அதிகப்படுத்தவும் கூடும்; குறைக்கவும் கூடும். பிறவிப் பண்புகளின் குறைபாடுகள் அதிகப்படின் குழந்தை, பள்ளி வாழ்க்கைக்குச் சரியாகப் பொருத்தப்பாடு அடைய முடியாது. (i) காப்பின்மை” :-சரியான பாதுகாப்பு இன்மையால் குழந்தை யிடம் எழும் போராட்டங்களே அதிகமானவை ; கொடுமையானவை. குழந்தைக்கு வேண்டிய உணவு, தேவையான அன்பு, சரியான பயிற்சி, உண்மையான விடுதலை போன்றவை வீட்டில் கிடைத்தால் குழந்தை பள்ளியில் புகும்பொழுது நல்ல ஆளுமையுடன் திகழும். குழந்தை யின் அக்கம்பக்க உறவு முறைகளும் செவ்விதின் அமைந்திருந்தால் இவ் வாளுமை இன்னும் சிறப்பாக இருக்கும். பெற்ருேர் தன்மீது தக்க முறையில் அன்பும் ஆதரவும் காட்டா விட்டாலும், தன்னிடமிருந்து மிதமிஞ்சிய உயர்நிலையை எதிர்பார்த் தாலும், குடும்ப ஒழுங்கை நிறைவேற்றுவதற்காகக் குழந்தையிடம் வசவு களையும் தண்டனைகளையும் கையாண்டாலும் குழந்தை தன்னைப் பெற். ருேர் புறக்கணிப்பதாகத் கருதும். புறக்கணிக்கும் சில பெற்ருேர், தாம் குழந்தையை நடத்தும் முறை குழந்தையின் நன்மைக்கே என்று காரண மும் கற்பித்துக் கொள்வதை நாம் காண்கின் ருேம். (ii) பாதுகாப்பு மிகுதி -பாதுகாப்பு மிகுதியாலும் குழந்தைக ளிடம் போராட்டங்கள் எழலாம். பாதுகாப்பில் இரண்டு வகையுண்டு. ஒன்றில் பெற்றேரது ஆதிக்கம்? மிக்கிருக்கும். இத்தகைய பெற்ருேர் கள் குழந்தைகளைப் பொறுப்புக்களை ஏற்கவும், கடமைகளைச் செய்யவும் வாய்ப்புக்களைத் தருவதில்லை. இவர்கள் குழந்தைக்குத் தேவையான o srůstairsota – insecurity. 7 &#9àssid-dominance.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/352&oldid=778264" இலிருந்து மீள்விக்கப்பட்டது