பக்கம்:கல்வி உளவியல்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 கல்வி உளவியல் வேண்டும். பெரும்பாலும் தேர்வுகளை ஆயத்தம் செய்தல், அவற்றைத் தக்க முறையில் அச்சிடல் ஆகியவற்றில்தான் சங்கடங்கள் நேரிடுகின் றன. தெளிவான செயற்குறிப்புகள், நல்லதாள், தெளிவான அச்சு, தாளின் அளவு, குழந்தைகளின் வயதிற்கேற்றவாறு பயன்படுத்தும் அச்செழுத்துக்கள், மதிப்பெண்கள் அளிப்பதில் எளிமை ஆகியவை ஆய்வுகளைக் கையாளும் எளிமையை அளவுபடுத்தக்கூடும். சிறப்பாக, நிரப்பு ஆய்வுகளில் மாளுக்கர்கள் விடையளிப்பதற்கேற்றவாறு போதிய இடம் விடப்பட்டிருக்க வேண்டும். மேலும், புதிய முறை ஆய்வுகளில் அச்சுப்பிழையே இருத்தல் கூடாது. ஏனெனில், இவற்றில் இடை இடையே மாளுக்கர்களை அச்சுப்பிழைகளை நீக்கிக் கொள்ளுமாறு கூறுதல், விடையளிப்பதில் மாணுக்கர்களின் வேகத்தைக் குறைத்து, அது காரணமாக, மதிப்பெண்களையும் குறைத்துவிடும். புதிய முறை ஆய்வுகளை சைக்லோஸ்டைல் (cyclostyle) செய்யுங்கால் இவ்விதமான வழுக்களும், மைவிழுதலில் உள்ள குறைகளும் நேரிடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அறிக்கைகள் இது மக்களாட்சிமுறை நடைமுறையில் உள்ள காலம். அரசினரின் வரி பளு அதிகரிப்பிற்கேற்பவும், பொதுமக்கள் கல்வியறிவின் அதிகரிப்பிற்கேற்பவும், நவீன செலவினங்களின் அதிகரிப்பிற்கேற்பவும் பொதுமக்கள் பொதுச்செலவினங்களைப்பற்றித் திறனயும் திறனும் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. எனவே, இன்றைய ஆசிரி யர்கள் பொதுமக்களுடன் பலவிதங்களில் தொடர்புகொள்ளுதல் இன்றி யமையாதது. பொதுமக்களுடன் கொள்ளும் தொடர்பு இரண்டு நோக் கங்களைக்கொண்டது. ஒன்று: பள்ளிகளின் அவசியம், பள்ளிகளில் நடை பெறும் நிகழ்ச்சிகள், பள்ளிகளின் சாதனைகள், பள்ளிகளின் தேவைகள் ஆகியவற்றைப்பற்றிப் பொதுமக்கள் நன்கறியச் செய்வது. இரண்டு : சமூகத்தின் விருப்பங்கள், தேவைகள் ஆகியவை பற்றியும் கல்வியைப்பற்றியும் பொதுமக்கள் கொண்டுள்ள கருத்துக்களைப் பள்ளி கன்கறியச் செய்வது; அதாவது, இல்லம், பள்ளி என்ற இரண்டு முக்கிய கல்விநிலையங்களை ஒன்ருேடொன்று நன்முறையில் தொடர்பு கொள்ளச் செய்வதாகும். இந்த உறவினை ஏற்படுத்துவதற்கு நான்கு சாதனங்கள் துணை செய்யும். அவை : (1) உள்ளுர்ச் செய்தித்தாள்கள், மாணுக்கர் வெளியீடுகள் ஆகி

  1. 16)61,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/418&oldid=778407" இலிருந்து மீள்விக்கப்பட்டது