பக்கம்:கல்வி உளவியல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கல்வி உளவியல் மெய்ப்பொருளியல் உண்மையான அறிவைப் பெற முயலுகின்றது ; ஆளுல் அறிவின் தன்மை, அறிவின் வளர்ச்சி போன்ற பிரச்சினைகள் உளவியலைச் சார்ந்தவை. இதைப் பொறுத்தமட்டிலும் ஏனைய அறிவியல் களைவிட உளவியலுக்கு ஓர் ஏற்றமுண்டு என்பது நினைவுகூர்தற்பாலது. அன்றியும், மெய்ப்பொருளியலின் பகுதிகளாகிய அறநூல்: , அளவை நூல்" போன்றவையும் உளவியலுடன் நெருங்கிய தொடர்புடையவை. மெய்ப்பொருளியலும் உளவியலும் நெருங்கிய தொடர்புடையவையாயி னும், அவற்றுள் சில வேற்றுமைகளும் உள்ளன. மெய்ப்பொருளியல், நாம் காணும் உலகினைத் தோற்றம் என்று கூறும் ; உளவியல், உலகை உண்மையென ஒப்புக்கொண்டு தன் ஆராய்ச்சியைத் தொடங்கும். முன்னது சோதனைகளைவிட அகக் காட்சியையே முக்கியமானதாகக் கருதுகின்றது ; பின்னது பிற அறிவியல்களைப்போல் சோதனைகள், புள்ளிவிவரங்கள் போன்ற முறைகளை மேற்கொள்ளுகின்றது. இவ்விடத்தில் கல்வி மெய்ப்பொருளியலுக்கும் கல்வி உளவியலுக் கும் உள்ள தொடர்பையும் கவனித்தல் சாலப் பயன் தரும். கல்வி மெய்ப்பொருளியல் வாழ்க்கையின் பயன், உலகத்தின் கருத்து, கல்வி கற்றலின் காரணம் போன்ற பிரச்சினைகளை ஆய்கின்றது. கல்வியை அளிக்கும்முறை, உயர்ந்த குறிக்கோள்களை வளர்க்கும் வழிவகைகள், சுவையறிவை ஊட்டும் முறை, தவருண எண்ணங்களை அகற்றும் முறை, சிக்கனமாகக் கற்கும்முறை, நடத்தையின் வளர்ச்சி முறை, படித்தலைத்** தொடங்கும் காலம், எழுதுவதைத் தொடங்கும் பருவம், கற்பழக்கங்களை ஏற்படுத்தவும் தீய பழக்கங்களை ஒழிக்கவும் ஆனமுறைகள், திறன்களை வளர்க்கும் முறைகள், பற்றுக்கள் உண்டாகும் விதம் போன்ற பல பிரச்சினைகளைக் கல்வி உளவியல் ஆராய்கின்றது. மேலும், பயிற்றல் கற்றல் முறைகள், உபாயங்கள், வழிவகைகள், திட்டங் கன் முதலியவற்றைக் கல்வி உளவியலின் துணையால்தான் நாம் பெறு கின்ருேம். குழந்தைகள் சூழ்நிலைக்குப் பொருத்தமுறுவதையும் ஆசிரி பர்கள் பள்ளிச் சூழ்நிலைக்குப் பொருத்தமுறுவதையும் கல்வி உளவியல் எளிதாக்கிப் பயனுடையதாகவும் ஆக்குகின்றது. உளவியலும் உடலியலும் : உளவியல் முழுமனிதனின் செயல்கனைக் கூறுகின்றது. உடலியல் உடலில் பல உறுப்புக்களின் அமைப்பையும் அவற்றின் செயல்களையும் எடுத்தியம்புகின்றது. எனி க3அததுரல்-ethics; அனவை நூல்-logic. 80கல்வி மெய்ப் பொரு séaé-educational philosophy. e1 ui, $gá—reading. 62 » Lsùué— physiology.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/43&oldid=778432" இலிருந்து மீள்விக்கப்பட்டது